திட்டமிட்டப்படி செப்டம்பர் மாதம் முதல் ரபேல் போர் விமானம் இந்தியாவிடம் ஒப்படைக்கப்படுகிறது அதிகாரி தகவல்


திட்டமிட்டப்படி செப்டம்பர் மாதம் முதல் ரபேல் போர் விமானம் இந்தியாவிடம் ஒப்படைக்கப்படுகிறது அதிகாரி தகவல்
x
தினத்தந்தி 13 July 2019 8:13 PM GMT (Updated: 13 July 2019 8:13 PM GMT)

பிரான்ஸ் நாட்டில் உள்ள தனியார் நிறுவனத்துடன் இந்தியா அதிநவீன வசதிகள் கொண்ட 36 ரபேல் போர் விமானங்களை வாங்க ஒப்பந்தம் செய்து உள்ளது.

கொல்கத்தா,

இரட்டை என்ஜின் கொண்ட அதிநவீன போர் விமானமான ரபேல் விமானம் வானில் இருந்து வானில் உள்ள இலக்கை தாக்கவும், வானில் இருந்து பூமியில் உள்ள இலக்குகளையும் தாக்கும் திறன் கொண்ட நவீன போர் விமானமாகும். இந்த விமானம் இந்திய ராணுவத்துக்கு மிகவும் பலம் வாய்ந்ததாக
கருதப்படுகிறது.

கொல்கத்தாவில் நடந்த ராணுவ விழா ஒன்றில் ராணுவ பாதுகாப்பு உற்பத்தி பிரிவு செயலாளர் அஜய்குமார் பேசுகையில் ‘பிரான்ஸ் நிறுவனத்துடன் இந்தியா செய்து கொண்ட ஒப்பந்தப்படி ரபேல் முதல் போர் விமானம் இந்தியாவிடம் செப்டம்பர் மாதம் ஒப்படைக்கப்பட இருப்பதாக இந்தியாவுக்கான பிரான்ஸ் தூதர் அலெக்சாண்டர் தெரிவித்தார். ஏற்கனவே திட்டமிட்டப்படி இன்னும் 2 மாதத்தில் முதல் ரபேல் போர் விமானம் ஒப்படைக்கப்படும் என்றும் இந்த ஒப்பந்தத்தில் முறைகேடு நடந்ததாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருவதை மறுத்த அவர் சட்ட விதிகளின்படி தான் இந்த ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது’ என்றார்.

Next Story