தேசிய செய்திகள்

பா.ஜனதா பொதுச்செயலாளராக இருந்து வந்த ராம்லாலுக்கு மீண்டும் ஆர்.எஸ்.எஸ். பதவி + "||" + BJP Who has been a general secretary Back to Ramlal RSS. Designation

பா.ஜனதா பொதுச்செயலாளராக இருந்து வந்த ராம்லாலுக்கு மீண்டும் ஆர்.எஸ்.எஸ். பதவி

பா.ஜனதா பொதுச்செயலாளராக இருந்து வந்த ராம்லாலுக்கு மீண்டும் ஆர்.எஸ்.எஸ். பதவி
பா.ஜனதா பொதுச்செயலாளராக இருந்து வந்த ராம்லாலுக்கு மீண்டும் ஆர்.எஸ்.எஸ். பதவி
புதுடெல்லி,

ஆர்.எஸ்.எஸ். அமைப்பில் இருந்து பாரதீய ஜனதா கட்சிக்கு வந்து, அதன் பொதுச்செயலாளர் (அமைப்பு) பதவி வகித்து வந்தவர் ராம்லால். இவர் ஆர்.எஸ்.எஸ்.சுக்கும், பாரதீய ஜனதா கட்சிக்கும் இடையே பாலமாக திகழ்ந்து வந்தார்.


இந்த நிலையில் ராம்லால், தன்னை கட்சிப்பணியில் இருந்து விடுவிக்க வேண்டும் என்று பாரதீய ஜனதா தலைவர் அமித் ஷாவுக்கு இரு முறை கடிதம் எழுதியதாக கூறப்படுகிறது.

இதையடுத்து அவர் கட்சிப்பணியில் இருந்து விடுவிக்கப்பட்டு, ஆர்.எஸ்.எஸ். அமைப்புக்கு திருப்பி அனுப்பப்பட்டார். அவர் 13 ஆண்டுகளுக்கு பிறகு ஆர்.எஸ்.எஸ். அமைப்புக்கு திரும்பி இருப்பது குறிப்பிடத்தக்கது.

அவர் முதலில் வகித்து வந்த அகில இந்திய தொடர்பு தலைவர் பதவியில் மீண்டும் அமர்த்தப்பட்டுள்ளார். அவர் வகித்து வந்த பாரதீய ஜனதா கட்சி பொதுச்செயலாளர் (அமைப்பு) பதவிக்கு வி.சதீஷ் நியமிக்கப்படலாம் என கூறப்படுகிறது.