நாளை அதிகாலை விண்ணில் பாய்கிறது சந்திரயான்-2


நாளை அதிகாலை விண்ணில் பாய்கிறது சந்திரயான்-2
x
தினத்தந்தி 14 July 2019 5:45 PM IST (Updated: 14 July 2019 5:45 PM IST)
t-max-icont-min-icon

ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் ஏவுதளத்தில் இருந்து சந்திரயான்-2 விண்கலம், நாளை அதிகாலை 2.51 மணிக்கு விண்ணில் செலுத்தப்படுகிறது.

ஸ்ரீஹரிகோட்டா, 

ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் ஏவுதளத்தில் இருந்து சந்திரயான்-2 விண்கலம், நாளை அதிகாலை 2.51 மணிக்கு விண்ணில் செலுத்தப்படுகிறது.  நிலவின் தென் துருவத்தை ஆராய்வதற்காக, ஜி.எஸ்.எல்.வி. மார்க்-3 ராக்கெட் மூலம் சந்திரயான்-2 விண்ணில் ஏவப்பட உள்ளது.  

இதற்கான  20 மணி நேர கவுண்ட் டவுன் இன்று காலை தொடங்கி உள்ளது. விண்ணில் ஏவிய 16 நிமிடங்களில் புவி சுற்றுவட்டப்பாதையில் சந்திரயான்-2 செலுத்தப்படும். 

பின்னர், நிலவின் சுற்று வட்டப்பாதைக்கு விண்கலம் மாறும். அந்த பாதையில் 45 நாட்கள் பயணித்து, செப்டம்பர் 6-ந் தேதி நிலவை சென்றடையும். சந்திரயான்-2 விண்ணில் ஏவப்படுவதை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் நேரில் பார்வையிடுகிறார். 

தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித், ஆந்திர ஆளுநர் நரசிம்மன், ஆந்திர முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி உள்ளிட்டோரும் நேரில் பார்வையிடுகிறார்கள். இதற்காக ஸ்ரீஹரிகோட்டாவில் விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பொதுமக்கள் பார்வையிடுவதற்கும் வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

Next Story