பா.ஜனதாவுக்கு புதிய பொதுச்செயலாளர் பி.எல்.சந்தோஷ் நியமனம்


பா.ஜனதாவுக்கு புதிய பொதுச்செயலாளர் பி.எல்.சந்தோஷ் நியமனம்
x
தினத்தந்தி 15 July 2019 4:30 AM IST (Updated: 15 July 2019 4:06 AM IST)
t-max-icont-min-icon

மத்தியில் ஆளும் பாரதீய ஜனதா கட்சியின் செல்வாக்கு மிகுந்த பொதுச்செயலாளர் (அமைப்பு) பதவி வகித்து வந்த ராம்லால், தாய் அமைப்பான ஆர்.எஸ்.எஸ்.சுக்கு திருப்பி அனுப்பப்பட்டு, அதன் அகில இந்திய தொடர்பு தலைவராக பொறுப்பேற்றார்.

புதுடெல்லி,

இந்தநிலையில் அவர் வகித்து வந்த பாரதீய ஜனதா கட்சி பொதுச்செயலாளர் (அமைப்பு) பதவிக்கு பி.எல். சந்தோஷ் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான அறிவிப்பை கட்சித்தலைவர் அமித் ஷா நேற்று வெளியிட்டார். இந்த நியமனம் உடனடியாக அமலுக்கு வந்துள்ளது.

பி.எல்.சந்தோஷ், இதுவரை பாரதீய ஜனதா கட்சியின் இணைப் பொதுச்செயலாளர் (அமைப்பு) பதவி வகித்து வந்தார்.

கர்நாடக மாநிலத்தை சேர்ந்த இவர் ஆர்.எஸ்.எஸ். பிரசாரகர், தேர்தல் அரசியலில் அனுபவம் மிக்கவர். இவர் அங்கு மாநில பாரதீய ஜனதா கட்சி பொதுச்செயலாளர் (அமைப்பு) பதவியில் 8 ஆண்டு காலம் இருந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story