ஜம்மு காஷ்மீர்: எல்லையில் அத்துமீறி நுழைந்த நபர் சுட்டுக்கொலை


ஜம்மு காஷ்மீர்: எல்லையில் அத்துமீறி நுழைந்த நபர் சுட்டுக்கொலை
x
தினத்தந்தி 15 July 2019 2:00 PM IST (Updated: 15 July 2019 2:00 PM IST)
t-max-icont-min-icon

ஜம்மு காஷ்மீரில் உள்ள சர்வதேச எல்லையில் அத்துமீறிய நபர் பாதுகாப்பு படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டார்.

ஜம்மு,

ஜம்மு காஷ்மீரின் சம்பா மாவட்டத்தில் இந்தியா- பாகிஸ்தான் இடையேயான சர்வதேச எல்லை உள்ளது. இந்த எல்லையை தாண்டி அத்துமீறி பாகிஸ்தான் பகுதியில் இருந்து இந்தியாவுக்குள் ஒருவர் ஊடுருவ முயன்றார்.  

பாதுகாப்பு படையினரின்  எச்சரிக்கையையும் மீறி அத்துமீறியதால், பாதுகாப்பு படையினர் அவரை சுட்டுக்கொன்றனர். அதிகாலை 3 மணிக்கு இந்த சம்பவம் நடைபெற்றது.  சுட்டுக்கொல்லப்பட்ட நபரின் அடையாளம் காணும் பணி நடைபெற்று வருகிறது. 

Next Story