"தேர்வு முறைகளை பா.ஜ.க. அரசு மாற்றி வருகிறது" - டி.ஆர். பாலு குற்றச்சாட்டு


தேர்வு முறைகளை பா.ஜ.க. அரசு மாற்றி வருகிறது - டி.ஆர். பாலு குற்றச்சாட்டு
x
தினத்தந்தி 15 July 2019 3:04 PM IST (Updated: 15 July 2019 3:04 PM IST)
t-max-icont-min-icon

முந்தைய காங்கிரஸ் ஆட்சியில் இருந்த மத்திய அரசு தேர்வு முறைகளை தற்போதைய பாஜக அரசு மாற்றி வருவதாக மக்களவையில் பேசிய திமுக எம்.பி. டி.ஆர். பாலு குற்றம்சாட்டினார்.

புதுடெல்லி,

மக்களவையில் திமுக உறுப்பினர் டி.ஆர்.பாலு பேசும் போது கூறியதாவது:-

காங்கிரஸ்  ஆட்சி காலத்தில் இந்தி மற்றும் ஆங்கிலம் மட்டுமல்லாது மாநில மொழிகளிலும், அகில இந்திய தேர்வுகளை எழுதலாம் என்று அரசாணை வெளியிடப்பட்டது. காங்கிரஸ் ஆட்சியில் இருந்த மத்திய அரசு தேர்வு முறைகளை தற்போதைய பாஜக அரசு மாற்றி வருகிறது.

தபால்துறை தேர்வு ஆங்கிலம், இந்தியில் மட்டுமே நடைபெற்றிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.மாநில மக்களுடைய ஆர்வங்களை மத்திய அரசு கண்டுகொள்வதில்லை என கூறினார்.

Next Story