தேசிய செய்திகள்

நடத்தையில் சந்தேகம் : காதலியை கொலை செய்த காதலன் கைது + "||" + Suspecting her character man crushes 19-yr-old girlfriends face Cops

நடத்தையில் சந்தேகம் : காதலியை கொலை செய்த காதலன் கைது

நடத்தையில் சந்தேகம் : காதலியை கொலை செய்த காதலன் கைது
மராட்டியத்தில் நடத்தையில் சந்தேகம் காரணமாக காதலியை கொலை செய்த காதலனை போலீசார் கைது செய்துள்ளனர்.
மராட்டிய மாநிலம் நாக்பூரை சேர்ந்த 19 வயது பெண்ணான குஷி பரிக்கார்,  அஸ்ராஃப் ஷேக் என்ற இளைஞரை காதலித்து வந்துள்ளார். மாடலிங் துறையில் சாதிக்க வேண்டும் என்ற கொள்கையுடன் இருந்த குஷி அவ்வப்போது பேஷன் ஷோக்களில் தலைகாட்டியுள்ளார். மாடலிங் தொடர்பான நிகழ்ச்சிகளிலும் அவ்வப்போது கலந்து கொண்டுள்ளார். 

இதனால் காதலி மீது அஸ்ராஃபிற்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது.  இருவரும் கடந்த 12 ம் தேதி காரில் நாக்பூரின் தேசிய நெடுஞ்சாலையில் பயணம் செய்துள்ளனர். அப்போது காதலியின் கழுத்தை நெரித்து அஸ்ராஃப் கொலை செய்துள்ளார். சனிக்கிழமை அன்று நாக்பூர் நெடுஞ்சாலையில் பெண்ணின் சடலத்தை கண்ட பொதுமக்கள் காவல்துறையிடம் தகவல் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சடலத்தை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பினர். 

முதல்கட்டமாக அவர் யாரென்று அடையாளம் காணப்படவில்லை. பின்னர் சமூக வலைதளங்களில் அவருடைய புகைப்படத்தை வைத்து நாங்கள் அடையாளம் கண்டோம் என போலீசார் கூறியுள்ளனர். 

விசாரணையின் போது அஸ்ராஃப் ஷேக் சிக்கியுள்ளார். அவர் இளம்பெண்ணை கொலை செய்ததை ஒப்புக்கொண்டுள்ளார். இதனைத் தொடர்ந்து போலீஸ் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

1. சாங்கிலி, கோலாப்பூரில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இடங்களில் ராணுவம் மீட்பு பணியில் தீவிரம்
சாங்கிலி, கோலாப்பூரில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இடங்களில் ராணுவம் மீட்பு பணியில் தீவிரமாக இறங்கியுள்ளது.
2. மராட்டியத்தில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களை மீட்ட படகு கவிழ்ந்து 9 பேர் உயிரிழப்பு
மராட்டியத்தில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட இடங்களில் உள்ள மக்களை மீட்ட படகு கவிழ்ந்து விபத்துக்குள் சிக்கியதில் 9 பேர் உயிரிழந்துள்ளனர்.
3. மராட்டியத்தில் தொடரும் கனமழை: பல்வேறு மாவட்டங்கள் வெள்ளத்தில் மிதக்கின்றன
மராட்டியத்தில் தொடரும் கனமழை காரணமாக, பல்வேறு மாவட்டங்கள் வெள்ளத்தில் மிதக்கின்றன. இதில் பாதிக்கப்பட்ட 50 ஆயிரம் பேர் பத்திரமாக வெளியேற்றப்பட்டனர்.
4. மராட்டியத்தில் 4 எம்.எல்.ஏ.க்கள் பா.ஜனதாவில் இணைந்தனர்
மராட்டியத்தில் 4 எம்.எல்.ஏ.க்கள் பா.ஜனதாவில் நேற்று இணைந்தனர்.
5. மராட்டியத்தில் வங்கியின் மேல்தளம் இடிந்து விழுந்து விபத்து; ஒருவர் உயிரிழப்பு
மராட்டியத்தில் வங்கியின் மேல்தளம் இடிந்து விழுந்து விபத்து நேரிட்டதில் ஒருவர் உயிரிழந்தார்.