ஸ்டேட் வங்கிக்கு ரூ.7 கோடி அபராதம் ரிசர்வ் வங்கி நடவடிக்கை


ஸ்டேட் வங்கிக்கு ரூ.7 கோடி அபராதம் ரிசர்வ் வங்கி நடவடிக்கை
x
தினத்தந்தி 16 July 2019 8:20 AM IST (Updated: 16 July 2019 8:20 AM IST)
t-max-icont-min-icon

ஒழுங்கு முறை விதிகளை மீறியதற்காக ஸ்டேட் வங்கிக்கு ரூ.7 கோடி அபராதம் விதித்து ரிசர்வ் வங்கி நடவடிக்கை எடுத்துள்ளது.

மும்பை, 

ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

பாரத ஸ்டேட் வங்கியின் 2017-ம் ஆண்டு மார்ச் 31-ந்தேதி நிதிநிலைமை குறித்து தெரிவித்த தகவலின் அடிப்படையில் அங்கு ஆய்வு நடத்தப்பட்டது. அப்போது வருமான அங்கீகாரம் மற்றும் சொத்து வகைப்பாடு விதிகள், நடப்பு கணக்குகள் தொடங்குதல் மற்றும் இயக்குதலில் நடத்தை விதிமுறைகள், பெரிய கடன் களுக்கான மத்திய தகவல் அமைப்புக்கு விவரங்கள் அளிப்பது, மோசடி அபாய மேலாண்மை, மோசடி புகார்கள் போன்றவைகளில் ரிசர்வ் வங்கியின் உத்தரவுகள் பின்பற்றப்படவில்லை என தெரிந்தது.

இதன்படி நோட்டீஸ் அனுப்பப்பட்டு, வாய்மொழி விளக்கம் கேட்கப்பட்டது. அதன் அடிப்படையில் ரிசர்வ் வங்கியின் உத்தரவுகளை கடைபிடிக்காத காரணத்தால் பாரத ஸ்டேட் வங்கிக்கு ரூ.7 கோடி அபராதம் விதிக்கப்படுகிறது.


Next Story