3 பேர் தலை துண்டித்து படுகொலை; புதையலுக்காக நரபலி கொடுக்கப்பட்டார்களா?


3 பேர் தலை துண்டித்து படுகொலை; புதையலுக்காக நரபலி கொடுக்கப்பட்டார்களா?
x
தினத்தந்தி 16 July 2019 12:17 PM IST (Updated: 16 July 2019 12:17 PM IST)
t-max-icont-min-icon

3 பேர் தலை துண்டித்து படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புதையலுக்கு ஆசைப்பட்டு அவர்கள் நரபலி கொடுக்கப்பட்டார்களா? என்ற கோணத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது.

ஆந்திர  மாநிலம் அனந்தபுரத்தை அடுத்த கொத்திகோட்டா கிராமத்தில் மிகவும் பழமையான சிவன் கோவில் ஒன்று உள்ளது. அதனருகே வசித்து வந்த சிவராம் மற்றும் அவரின் சகோதரி கமலம்மா ஆகியோர் கோவிலுக்கு பூஜை செய்யும் பணிகளில் ஈடுபட்டு வந்தனர். பெங்களூருவை சேர்ந்த லட்சுமியம்மாள் என்பவரும் அவர்களுடன் வசித்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில், அவர்கள் மூவரும் தலை துண்டித்து கொலை செய்யப்பட்டுக் கிடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோவில் வளாகத்தில் ஆய்வு மேற்கொண்ட காவல்துறையினர், கோவிலுக்கு அருகே பூஜை நடத்தப்பட்டிருப்பதையும், சிவலிங்கத்தின் மீது ரத்தக்கறை இருந்ததையும் கண்டு அதிர்ச்சியடைந்தனர். கோவில் வளாகத்திலும் ரத்தம் தெளிக்கப்பட்டிருப்பதாக தெரிகிறது.

பூஜை நடத்தப்பட்டிருப்பது தெரிய வந்ததால், புதையல் இருப்பதாகக் கருதி யாரேனும் அவர்களை நரபலி கொடுத்தார்களா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள காவல்துறையினர், கொலைக்கான காரணம் குறித்த விசாரணையைத் தீவிரப்படுத்தியுள்ளனர்.

Next Story