தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படவில்லை என்றால் உள்ளாட்சி அமைப்புகளுக்கான நிதியை விடுவிக்க மாட்டோம் - மத்திய அமைச்சர்
"தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படவில்லை என்றால் உள்ளாட்சி அமைப்புகளுக்கான நிதியை விடுவிக்க மாட்டோம்" என மத்திய அமைச்சர் நரேந்திரசிங் தோமர் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி,
மக்களவையில் இன்று கேள்வி நேரத்தின் போது திமுக உறுப்பினர் ஆ.ராசா பேசுகையில்,
உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் நடத்தப்படவில்லை என்றால் வெளிப்படைத்தன்மை எப்படி நிலவும்? பல ஆண்டுகளாகவே தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படவில்லை, உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படுவதை உறுதி செய்ய தனிச்சட்டம் இயற்ற வேண்டும். தமிழகத்தில் எந்த திட்டம் என்றாலும் கமிஷன், வசூல், ஊழலே காணப்படுவதாக குற்றம்சாட்டி பேசினார்.
ஆ.ராசாவின் கேள்விக்கு பதில் அளித்த மத்திய அமைச்சர் நரேந்திரசிங் தோமர், உள்ளாட்சி அமைப்புகளுக்கு நிதி ஒதுக்கும் விவகாரம் தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு உள்ளது. தமிழகத்தில் உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலை நடத்தாவிட்டால், உள்ளாட்சி அமைப்புகளுக்கான நிதியை விடுவிக்க மாட்டோம் என கூறினார்.
Related Tags :
Next Story