மிராஜ்-2000 விமான விபத்தில் பலியான வீரரின் மனைவி விமானப்படையில் இணைகிறார்!
ஆண்டின் துவக்கத்தில் மிராஜ்-2000 விமான விபத்தில் பலியான வீரரின் மனைவி விமானப்படையில் இணைந்து பணியாற்ற உள்ளார்.
புதுடெல்லி,
கடந்த 5 மாதத்துக்கு முன்பு மிரேஜ் 2000 போர்விமான பயிற்சியின் போது ஏற்பட்ட விபத்தில் விமானி சமிர் அப்ரால் உயிரிழந்தார். இந்த நிலையில், தனது கணவரின் பணியை தான் தொடரவுள்ளதாக அவரின் மனைவி கரிமா அப்ரால் தெரிவித்துள்ளார். கரிமா அப்ரால், அதற்கான நேர்முகத் தேர்வுகளில் தேர்ச்சி பெற்றுள்ளார்.
அவர் தெலுங்கானாவின் தண்டிகால் பகுதியில் உள்ள விமானப்படை அகாடமியில் 2020-ம் ஆண்டு ஜனவரியில் சேரவுள்ளார். பயிற்சி முடிந்ததும் விரைவில் இந்திய விமானப்படையில் சேர்ந்து தனது கணவரின் சேவையை கரிமா அப்ரால் தொடர இருக்கிறார்.
சமூக வலைதள பக்கத்தில் கடைசியாக பதிவிட்டுள்ள கரிமா அப்ரால், என் கண்ணீர் இன்னமும் காயவில்லை. ஒரு கோப்பை தேநீரை கையில் கொடுத்த படி எனது கணவரை இந்த நாட்டுக்கு சேவை செய்ய அனுப்பினேன் என பதிவிட்டுள்ளார்.
விமானப்படை சேவையில் தனது கணவரை இழந்த போதிலும், தானும் பணியாற்றி நாட்டுக்கு சேவை செய்ய கரிமா அப்ரால் முடிவு செய்து இருப்பது நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story