வெள்ள நிவாரண பணிகளுக்கு உதவுங்கள் கட்சி தொண்டர்களுக்கு ராகுல் காந்தி கோரிக்கை


வெள்ள நிவாரண பணிகளுக்கு உதவுங்கள் கட்சி தொண்டர்களுக்கு ராகுல் காந்தி கோரிக்கை
x
தினத்தந்தி 16 July 2019 8:16 PM IST (Updated: 16 July 2019 8:16 PM IST)
t-max-icont-min-icon

வெள்ள நிவாரண பணிகளுக்கு உதவுங்கள் என கட்சி தொண்டர்களுக்கு ராகுல் காந்தி கோரிக்கை விடுத்துள்ளார்.


வடமாநிலங்களில் பலத்த மழையால் வெள்ள பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அங்கு மீட்பு, நிவாரண பணிகளில் ஈடுபடுமாறு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தனது கட்சியினருக்கு அறிவுரை கூறியுள்ளார். இதுகுறித்து டுவிட்டரில் வெளியிட்டுள்ள செய்தியில், அசாம், பீகார், உத்தரபிரதேசம், திரிபுரா, மிசோரம் ஆகிய மாநிலங்களில் வெள்ள பாதிப்பு ஏற்பட்டுள்ளது. நிலைமை கட்டுப்பாட்டை மீறிவிட்டது. இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. ஆகவே, அந்த மாநிலங்களில் உள்ள காங்கிரஸ் தொண்டர்கள், சாதாரண மக்களுக்காக மீட்பு மற்றும் நிவாரண பணிகளில் உதவ வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன் என குறிப்பிட்டுள்ளார். 

Next Story