சமாஜ்வாடி கட்சி தலைவர் சுட்டுக்கொலை


சமாஜ்வாடி கட்சி தலைவர் சுட்டுக்கொலை
x
தினத்தந்தி 17 July 2019 12:15 AM IST (Updated: 16 July 2019 11:35 PM IST)
t-max-icont-min-icon

உத்தரபிரதேச மாநிலத்தில் சமாஜ்வாடி கட்சி தலைவர் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டார்.

லக்னோ,

உத்தரபிரதேச மாநிலம் பைசாபாத் மாவட்டம் கனக்பூர் கிராமத்தை சேர்ந்தவர் அகிலேஷ் யாதவ் (வயது 30). இவர் சமாஜ்வாடி கட்சி இளைஞரணி பகுதி தலைவராக இருந்தார். அவர் நேற்று மாலை வீட்டு அருகே உள்ள ஒரு உடற்பயிற்சி கூடத்தில் பயிற்சி செய்துகொண்டிருந்தார். அப்போது சிலர் அவரை துப்பாக்கியால் சுட்டனர். படுகாயமடைந்த அவரை ஆஸ்பத்திரிக்கு கொண்டுசென்றனர். அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

ஒரு போக்குவரத்து நிறுவனம் தொடர்பாக அவருக்கும், ஆதித்யா சிங் என்பவருக்கும் தகராறு இருந்து வந்தது. இதில் ஆதித்யா சிங் கூட்டாளிகளுடன் சேர்ந்து அகிலேஷ் யாதவை சுட்டுவிட்டு தலைமறைவாகிவிட்டார் என்று போலீசார் தெரிவித்தனர். சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ்யாதவ், மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுவிட்டது, இதுபோன்ற கொலை சம்பவங்கள் அதிகரித்துவிட்டது என்று யோகி ஆதித்யநாத் அரசு மீது குற்றம்சாட்டினார்.


Next Story