அபூர்வ சந்திர கிரகணம் இன்று நிகழ்ந்தது


அபூர்வ சந்திர கிரகணம் இன்று நிகழ்ந்தது
x
தினத்தந்தி 17 July 2019 2:06 AM IST (Updated: 17 July 2019 2:06 AM IST)
t-max-icont-min-icon

149 ஆண்டுகளுக்கு ஒரு முறை மட்டுமே நிகழும் அபூர்வமான சந்திர கிரகணம் இன்று நிகழ்ந்தது.

புதுடெல்லி,

பூமி சூரியனுக்கும் சந்திரனுக்கும் இடையே நேர்கோட்டில் வரும்போது சந்திர கிரகணம் நிகழ்கிறது. இந்த நிகழ்வின்போது பூமியின் நிழல் சந்திரன் மீது விழுந்து அதனை மறைக்கிறது.

சந்திர கிரகண நிகழ்வின்போது பூமியின் நிழல் பகுதி அளவு மட்டுமே சந்திரனை மறைக்கும். சூரியன் மற்றும் சந்திரனுக்கு இடையே பூமி சரியான நேர்கோட்டில் அமையாமல் பகுதியளவு நேர்கோடாக வருவதால் இந்த பாதி சந்திர கிரகணம் நடக்கிறது.

இந்த சந்திர கிரகணம் 149 ஆண்டுகளுக்குப் பின் நடப்பது ஆகும். மிகவும் அபூர்வமான இந்த சந்திர கிரகணத்தை வெறும் கண்களால் கூட பார்க்க முடியும் என கூறப்பட்டிருந்தது. இந்நிலையில், இந்தியாவில் இந்த சந்திர கிரகணம் இன்று தெரிந்தது. நள்ளிரவு 12.12 மணிக்கு தொடங்கிய இந்த சந்திர கிரகண நிகழ்வு, மெல்ல மெல்ல வளர்ந்து அதிகாலை 1.31 மணிக்கு முழுமை அடைந்தது. பின்னர், சிறிது சிறிதாக பூமியின் நிழல் சந்திரன் மீதிருந்து விலகிக்கொண்டே வரும். அதன்படி அதிகாலை 4.29 மணிக்கு சந்திர கிரகணம் முடிய உள்ளது. இந்த கிரகணத்தை ஆஸ்திரேலியா, ஆப்பிரிக்கா, தென் அமெரிக்கா, வளைகுடா நாடுகளில் தெளிவாக காணமுடிந்ததாக தகவல் வெளியாகி உள்ளது. அடுத்ததாக இந்தியாவில் 2021-ம் ஆண்டுதான் அடுத்த முழுமையான கிரகணம் தோன்றும் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story