விதிமீறலில் ஈடுபட்ட 14,800 தொண்டு நிறுவனங்களின் பதிவு ரத்து
விதிமீறலில் ஈடுபட்ட 14,800 தொண்டு நிறுவனங்களின் பதிவு ரத்து செய்யப்பட்டது.
புதுடெல்லி,
வெளிநாடுகளில் இருந்து நிதி பெறும் தொண்டு நிறுவனங்கள், வெளிநாட்டு நன்கொடை ஒழுங்குமுறை சட்டப்படி பதிவு செய்துகொள்ள வேண்டும். அப்படி பதிவு செய்த தொண்டு நிறுவனங்களில், வெளிநாட்டு நன்கொடை ஒழுங்குமுறை சட்ட விதிமுறைகளை மீறியதாக கண்டறியப்பட்ட 14 ஆயிரத்து 800 தொண்டு நிறுவனங்களின் பதிவு, கடந்த 5 ஆண்டுகளில் ரத்து செய்யப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற மக்களவையில் கேள்வி நேரத்தின்போது மத்திய உள்துறை இணை மந்திரி நித்யானந்த் ராய் இத்தகவலை தெரிவித்தார்.
கடந்த 2017-2018 நிதியாண்டில், தொண்டு நிறுவனங்கள் ரூ.16 ஆயிரத்து 894 கோடி வெளிநாட்டு நன்கொடை பெற்றுள்ளதாக அவர் கூறினார்.

Related Tags :
Next Story