பெட்ரோல் விலை உயர்வு, டீசல் விலையில் மாற்றம் இல்லை


பெட்ரோல் விலை உயர்வு, டீசல் விலையில் மாற்றம் இல்லை
x
தினத்தந்தி 17 July 2019 1:06 AM GMT (Updated: 17 July 2019 1:06 AM GMT)

பெட்ரோல் விலை லிட்டருக்கு 6 காசுகள் அதிகரித்து ஒரு லிட்டர் ரூ. 76.09 ஆக விற்பனையாகிறது.

சென்னை,

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலைக்கேற்ப மாதமிருமுறை பெட்ரோல் மற்றும் டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் மாற்றியமைத்து விற்றன.  பெட்ரோல் மற்றும் டீசல் விலையை தினந்தோறும் என்ற அடிப்படையில் நிர்ணயித்து விற்பனை செய்ய மத்திய அரசு எண்ணெய் நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கியது.  கடந்த ஆண்டு முதல் இந்த நடைமுறை அமலுக்கு வந்தது.

எண்ணெய் நிறுவனங்கள்  வெளியிட்டுள்ள அறிவிப்பில், சென்னையில் பெட்ரோல், நேற்றைய விலையிலிருந்து 6 காசுகள் அதிகரித்து, லிட்டருக்கு ரூ.76.09 ஆகவும், டீசல், நேற்றைய விலையிலிருந்து மாற்றம் எதுவும் இல்லாமல் லிட்டருக்கு ரூ.69.96 காசுகளாகவும் உள்ளது. இந்த விலை இன்று (ஜூலை 17) காலை முதல் அமலுக்கு வந்தது.

Next Story