தேசிய செய்திகள்

திருமணம் செய்த 24 மணி நேரத்தில் முத்தலாக் கூறி விவகாரத்து செய்தவர் + "||" + Within 24 hours of getting married Muttalaq Who has had affairs

திருமணம் செய்த 24 மணி நேரத்தில் முத்தலாக் கூறி விவகாரத்து செய்தவர்

திருமணம் செய்த 24 மணி நேரத்தில் முத்தலாக் கூறி விவகாரத்து செய்தவர்
உத்தரபிரதேச மாநிலத்தில் கேட்ட வரதட்சணை தரவில்லை என்பதால் மனைவியை திருமணம் செய்த 24 மணிநேரத்தில் முத்தலாக் கூறி விவகாரத்து செய்த சம்பவம் நடந்துள்ளது.
லக்னோ

உத்தரபிரதேச மாநிலம் பாராபங்கி அருகே ஜஹாங்கிர்பாத் பகுதியைச் சேர்ந்தவர் ஷாகே ஆலம். இவருக்கு கடந்த 13-ம் தேதி ருக்ஷனா பானு என்ற பெண்ணுடன் திருமணம் நடந்துள்ளது.

திருமண வரதட்சணையாக  மணமகனுக்கு மோட்டார் பைக்கை வாங்கி தருவதாக பெண் வீட்டார் வாக்குறுதி அளித்ததாக கூறப்படுகிறது. ஆனால் கூறியபடி வாங்கி தரவில்லை.  இதைத் தொடர்ந்து கேட்ட வரதட்சணை தரவில்லை என்பதால் மனைவியை திருமணம் செய்த 24 மணிநேரத்தில் முத்தலாக் கூறி விவகாரத்து செய்தார். இதுகுறித்து  பெண்ணின் வீட்டார் போலீசில் புகார் அளித்து உள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

1. முத்தலாக் முறையால் பாதிக்கப்பட்ட முஸ்லிம் பெண்களுக்கு ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் உதவித்தொகை
முத்தலாக் முறையால் பாதிக்கப்பட்ட முஸ்லிம் பெண்களுக்கு 2020 முதல் ஆண்டுக்கு 6 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்று உத்தரபிரதேச அரசு அறிவித்துள்ளது.
2. சேலை கலரை மாற்றியது ஒரு தப்பா? வைரலான பெண் தேர்தல் அதிகாரி
பெண் தேர்தல் அதிகாரி பிங்க் நிற சேலையில் வந்ததை சிலர் புகைப்படமெடுத்து சமூக வலைதளங்களில் பதிவு செய்தனர். இந்த படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகியுள்ளன.
3. குப்பைகளில் இருந்து பிளாஸ்டிக் பைகளை சேகரிக்கும் பெண்களை சந்தித்து பேசினார் மோடி
குப்பைகளில் இருந்து நெகிழிப் பைகளை சேகரிக்கும் பெண்களை பிரதமர் மோடி சந்தித்து பேசி அவர்களுக்கு உதவிகரம் நீட்டினார்.
4. மோடி தொகுதி பள்ளிக்கூடத்திற்கு மின் கட்டணம் ரூ.618.5 கோடி அதிர்ச்சியில் நிர்வாகம்
உத்தரபிரதேச பள்ளிக்கு இரண்டு மாத மின் கட்டணமாக 618.5 கோடி ரூபாய் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.
5. மாயாவதி மின்சார கம்பி போன்றவர் அவரை தொட்ட எவரும் இறந்துவிடுவர் உபி மந்திரி சர்ச்சை பேச்சு
மாயாவதி ஒரு மின்சார கம்பி போன்றவர் அவரை தொட்ட எவரும் இறந்து விடுவார்கள் என உத்தரபிரதேச மந்திரி ஒருவர் பேசி சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளார்.