திருமணமாகாத பெண்கள் செல்போன் பயன்படுத்த தடை மீறினால் ரூ.2 லட்சம் அபராதம்


திருமணமாகாத பெண்கள் செல்போன் பயன்படுத்த தடை மீறினால் ரூ.2 லட்சம் அபராதம்
x
தினத்தந்தி 17 July 2019 10:21 AM GMT (Updated: 17 July 2019 10:21 AM GMT)

குஜராத் மாநிலத்தில் உள்ள தாக்கூர் சமூக மக்கள், தாங்கள் பெரும்பான்மையாக உள்ள கிராமங்களில் திருமணமாகாத தங்கள் சமூகத்தைச் சேர்ந்த பெண்கள் செல்போன் பயன்படுத்த தடை விதித்துள்ளனர்.

தற்போதைய சூழலில் செல்போன் உபயோகம் என்பது மனிதனுடன் ஒன்றிவிட்டது. இந்நிலையில், குஜராத் மாநிலத்தில் உள்ள பனஸ்கந்தா மாவட்டத்தில் சில ஊர்களில் திருமணமாகாத பெண்கள் செல்போன் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.

தாக்கூர் சமூக மக்கள் சில நாட்களுக்கு முன்பு ஆலோசனைக் கூட்டம் ஒன்று நடத்தியுள்ளனர். அதில், தங்கள் இன மக்கள் வாழும் 10க்கும் மேற்பட்ட கிராமங்களில், திருமணமாகாத பெண்கள் செல்போன் பயன்படுத்த தடை என்று அறிவித்தனர்.

மேலும், செல்போன் பயன்படுத்தினால் சம்பந்தப்பட்ட பெண்களின் குடும்பத்தினருக்கு சுமார் ரூ. 2 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும் என அறிவித்துள்ளனர். இதனைத் தொடர்ந்து, 10க்கும் மேற்பட்ட கிராமங்களில் உடனடியாக இந்த நடைமுறையை அமல்படுத்தியுள்ளனர்.

Next Story