ஜம்மு-காஷ்மீரில் 2019 ஜூன் வரை மொத்தம் 126 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டு உள்ளனர் -பாதுகாப்பு அமைச்சகம்


ஜம்மு-காஷ்மீரில் 2019 ஜூன் வரை மொத்தம் 126 பயங்கரவாதிகள்  கொல்லப்பட்டு உள்ளனர்  -பாதுகாப்பு அமைச்சகம்
x

ஜம்மு-காஷ்மீரில் 2019 ஜூன் வரை மொத்தம் 126 பயங்கரவாதிகள் பாதுகாப்பு படை வீரர்களால் கொல்லப்பட்டு உள்ளனர் என பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்து உள்ளது.

புதுடெல்லி

உள்துறை அமைச்சகம்  மாநிலங்களவைக்கு எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் கூறி உள்ளதாவது:-

ஜம்மு-காஷ்மீரில் 2019 ஜூன் வரை மொத்தம் 126 பயங்கரவாதிகள் பாதுகாப்பு படை வீரர்களால் கொல்லப்பட்டு உள்ளனர். 16 பேர் கைது செய்யப்பட்டனர். கடந்த மூன்றரை ஆண்டுகளில் குற்றம் சாட்டப்பட்ட 27 பயங்கரவாதிகள்  கொண்டு வரப்பட்டனர் அல்லது நாடு கடத்தப்பட்டு உள்ளனர்.

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு  பயங்கரவாத நடவடிக்கைகளை  எந்த வகையிலும் சகித்து கொள்ளாது.  படைகள் பயங்கரவாதிகளை இல்லாதொழிக்க  தேவையான  நடவடிக்கைகளை எடுத்து வருவதாகவும் உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

2019 ஆம் ஆண்டில் இதுவரை 16 பயங்கரவாதிகளை சர்வதேச குற்றவியல் போலீஸ் அமைப்பு (இன்டர்போல்) மூலம் மோடி அரசு வெற்றிகரமாக கைது செய்து உள்ளது. 2018 ஆம் ஆண்டில், இண்டர்போல்  மூலம் 24 பேரும், 2017 ல் 35 பேரும், 2016 ல் 36 பேரும் கைது செய்யப்பட்டு உள்ளனர். இந்தியா 2019 ஆம் ஆண்டில் இன்டர்போலுக்கு சர்வதேச குற்றவாளிகளுக்காக  41 ரெட் கார்னர் நோட்டீஸை அனுப்பியது, அவற்றில் 32 வெளியிடப்பட்டுள்ளன.

2016 ஆம் ஆண்டில், சிபிஐ 91 நோட்டீஸ் அனுப்பியது, அதில் 87 வெளியிடப்பட்டது. 2017 ஆம் ஆண்டில், 94 நோட்டீஸ் அனுப்பப்பட்டன, அவற்றில் 87 அறிவிப்புகள் வெளியிடப்பட்டன, 2018 இல் 123 நோட்டீஸ் அனுப்பப்பட்டன, அவற்றில் 76 அறிவிப்புகள் மட்டுமே வெளியிடப்பட்டுள்ளன.

பிரதமர் மோடி ஆட்சிக்கு வந்த பின்னர், 2014 முதல் ஜம்மு-காஷ்மீரில் 963 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டு உள்ளனர். செவ்வாயன்று மக்களவையில் எழுத்துப்பூர்வ பதிலில் உள்துறை அமைச்சகத்தால் தகவல்கள்  வழங்கப்பட்டன.

ஜம்மு-காஷ்மீரில்  2018 இல் மொத்தம் 318 பயங்கரவாத தாக்குதல்கள் நடந்ததாக  பாதுகாப்புத் துறை அமைச்சர் ஸ்ரீபாத் நாயக் திங்களன்று மாநிலங்களவையில் தெரிவித்தார். இது 2017 ல் நடந்த தாக்குதல்களின் எண்ணிக்கையை விட 187 அதிகம் ஆகும்.

புல்வாமாவில் சிஆர்பிஎப் பணியாளர்களின் படையினர் மீது பிப்ரவரி 14 பயங்கரவாத தாக்குதல் உட்பட, 2019 ஆம் ஆண்டிலும் இந்தியா பல பயங்கரவாத தாக்குதல்களைக் கண்டது. ஜெய்ஷ்-இ-முகமது  தற்கொலை குண்டு தாக்குதலில் 40 க்கும் மேற்பட்ட சிஆர்பிஎப் வீரர்கள் நாட்டுக்காக உயிரிழந்தனர்.

Next Story