தேசிய செய்திகள்

கடித்த பாம்பை பிடித்து கடித்துக் கொன்றவர், தானும் இறந்தார் + "||" + He was bitten by a snake, and he died

கடித்த பாம்பை பிடித்து கடித்துக் கொன்றவர், தானும் இறந்தார்

கடித்த பாம்பை பிடித்து கடித்துக் கொன்றவர், தானும் இறந்தார்
கடித்த பாம்பை பிடித்து கடித்துக் கொன்றவர், தானும் இறந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.
ஆமதாபாத்,

குஜராத் மாநிலம் மகிசாகர் மாவட்டத்தில் உள்ள அஜன்வா கிராமத்தைச் சேர்ந்தவர் பார்வத் காலா பாரியா(வயது 60). இவர் நேற்று சோள கதிர்களை ஏற்றும் லாரியின் அருகே நின்று கொண்டிருந்தார். அப்போது ஒரு பாம்பு அவரை கடித்துவிட்டது. இதனால் காலாவுக்கு பாம்பு மேல் ஆத்திரம் ஏற்பட்டது. அந்த பாம்பை கைகளால் பிடித்து வாயில் வைத்து கடித்து துப்பினார். அவர் கடித்ததில் அந்த பாம்பு இறந்துவிட்டது.


அவரை கடித்த பாம்பு அதிக விஷத்தன்மை வாய்ந்தது. இதனால் அங்கு இருந்தவர்கள் அவரை உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பாம்பினுடைய விஷம் கடுமையாக ஏறிவிட்டதால் அவரை காப்பாற்ற முடியவில்லை. சிகிச்சை பலன் இன்றி காலா உயிரிழந்தார்.

பாம்பு கடித்த உடனே தாமதம் செய்யாமல் அவர் மருத்துவமனைக்கு வந்து இருந்தால் காப்பாற்ற முயற்சித்து இருக்கலாம். ஆனால் பாம்பை அவர் கடித்ததால் அதிலும் கோபத்தில் கடித்ததால் விஷம் எளிதில் அவரது ரத்தத்துடன் கலந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.