தேசிய செய்திகள்

ஏர் இந்தியா விமான நிறுவனப் பங்குகளை விற்பதற்கான திட்டம் வகுக்கும் குழுவின் தலைவராக அமித் ஷா நியமனம் + "||" + Amit Shah to head reconstituted ministerial panel on Air India sale, Nitin Gadkari dropped

ஏர் இந்தியா விமான நிறுவனப் பங்குகளை விற்பதற்கான திட்டம் வகுக்கும் குழுவின் தலைவராக அமித் ஷா நியமனம்

ஏர் இந்தியா விமான நிறுவனப் பங்குகளை விற்பதற்கான திட்டம் வகுக்கும் குழுவின் தலைவராக அமித் ஷா நியமனம்
ஏர் இந்தியா விமான நிறுவனப் பங்குகளை விற்பதற்கான திட்டம் வகுக்கும் குழுவின் தலைவராக, உள்துறை அமைச்சர் அமித் ஷா நியமிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
புதுடெல்லி

கடன் நெருக்கடியில் சிக்கி உள்ள ஏர் இந்தியா நிறுவனத்தின் பங்குகளை விற்பதற்கான திட்டங்களை வகுப்பதற்காக, முன்னாள் நிதி அமைச்சர் அருண் ஜேட்லி தலைமையில் 5 அமைச்சர்கள் கொண்ட குழு ஏற்கனவே அமைக்கப்பட்டது.

அந்தக் குழுவில், அசோக் கஜபதி ராஜூ, சுரேஷ் பிரபு, பியுஷ் கோயல் மற்றும் நிதின் கட்கரி ஆகியோர் இருந்தனர். இந்தக் குழுவின் ஆலோசனையின் பேரில், கடந்த ஆண்டு, மே மாதத்தில், ஏர் இந்தியாவின் 76 விழுக்காடு பங்குகளை விற்க ஏற்பாடு நடந்தது. ஆனால், பங்குகளை வாங்க எந்த நிறுவனமும் ஆர்வம் காட்டவில்லை.

தற்போது மோடி தலைமையில் மீண்டும் ஆட்சி அமைந்துள்ளதால், ஏர் இந்தியாவின் பங்குகளை விற்கும் முயற்சி தீவிரம் அடைந்துள்ளது.

5 பேர் கொண்ட குழு கலைக்கப்பட்டு 4 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. அமித் ஷா தலைமையிலான இக்குழுவில், நிர்மலா சீத்தாராமன், பியுஷ் கோயல், ஹர்தீப்சிங் புரி ஆகியோர் இடம்பெற்றுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த ஆண்டு இறுதிக்குள், ஏர் இந்தியாவை விற்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.