தேசிய செய்திகள்

வெளிநாடுகளில் உள்ள சிறைகளில் 8,189 இந்தியர்கள் கைதிகளாக உள்ளனர் - மத்திய அரசு தகவல் + "||" + 8,189 Indian Prisoners Lodged in Foreign Jails Saudi Arabia Holds Maximum With 1,811 Says MEA

வெளிநாடுகளில் உள்ள சிறைகளில் 8,189 இந்தியர்கள் கைதிகளாக உள்ளனர் - மத்திய அரசு தகவல்

வெளிநாடுகளில் உள்ள சிறைகளில் 8,189 இந்தியர்கள் கைதிகளாக உள்ளனர் - மத்திய அரசு தகவல்
வெளிநாடுகளில் உள்ள சிறைகளில் 8,189 இந்தியர்கள் கைதிகளாக உள்ளனர் என மாநிலங்களவையில் மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது.
மத்திய வெளியுறவுத்துறை இணை அமைச்சர் வி.முரளீதரன் நாடாளுமன்ற மாநிலங்களவையில் இவ்விவகாரம் தொடர்பான கேள்விக்கு பதிலளிக்கையில், வெளிநாடுகளில் உள்ள சிறைகளில் கடந்த மே 31–ந் தேதி நிலவரப்படி, 8 ஆயிரத்து 189 இந்திய கைதிகள் இருப்பதாக தெரிவித்தார்.  இவர்களில் விசாரணை கைதிகளும் அடங்குவர். அதிகஅளவாக, சவுதி அரேபிய சிறைகளில் ஆயிரத்து 811 இந்திய கைதிகள் உள்ளனர். இந்த இந்திய கைதிகளுக்கு பொது மன்னிப்பு அல்லது தண்டனை குறைப்பை பெற்றுத்தர தூதரகங்கள் மூலம் மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. கடந்த 2016–ம் ஆண்டில் இருந்து இப்போதுவரை, வளைகுடா நாடுகளில் 3 ஆயிரத்துக்கு மேற்பட்ட இந்திய கைதிகளுக்கு பொதுமன்னிப்பு அல்லது தண்டனை குறைப்பு கிடைத்திருக்கிறது என குறிப்பிட்டார்.

தொடர்புடைய செய்திகள்

1. மேல்முறையீடு: தகவல் அறியும் உரிமை ஆணையத்தில் 8,942 மனுக்கள் நிலுவையில் உள்ளன - ஆணையாளர் முருகன் பேட்டி
தமிழகத்தில் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் தகவல் கேட்டு பதில் வராமல் மேல்முறையீடு செய்த 8 ஆயிரத்து 942 மனுக்கள் ஆணையத்தில்நிலுவையில் உள்ளதாக, மாநில தகவல் ஆணையாளர் முருகன் கூறினார்.
2. இந்தியர்களின் தகவல்கள் திருடப்பட்டது குறித்து முன்கூட்டியே தெரிவிக்காதது ஏன்? - ‘வாட்ஸ்-அப்’ நிறுவனத்திடம் இந்தியா கேள்வி
இந்தியர்களின் ‘வாட்ஸ்-அப்’ தகவல்கள் திருடப்பட்டது குறித்து முன்கூட்டியே தெரிவிக்காதது ஏன்? என்று அந்த நிறுவனத்துக்கு இந்தியா கேள்வி எழுப்பியுள்ளது.
3. 11 பயங்கரவாதிகளை விடுதலை செய்ததால் பணய கைதிகளாக இருந்த 3 இந்திய என்ஜினீயர்களை தலீபான்கள் விடுவித்தனர்
ஆப்கானிஸ்தான் சிறையில் இருந்த 11 தலீபான் பயங்கரவாதிகள் விடுவிக்கப்பட்டதால் பணய கைதிகளாக இருந்த 3 இந்திய என்ஜினீயர்களை தலீபான் இயக்கம் விடுவித்தது.
4. ஈரான் சிறை பிடித்த இந்தியர்கள் அனைவரும் உடல் நலமுடன் உள்ளனர்; வெளியுறவு துறை மந்திரி
ஈரான் சிறை பிடித்த இந்தியர்கள் அனைவரும் உடல் நலமுடன் உள்ளனர் என வெளியுறவு துறை மந்திரி தெரிவித்துள்ளார்.
5. ஈரான் சிறை பிடித்த 18 இந்தியர்களும் விரைவில் விடுவிக்கப்படுவார்கள்; வெளியுறவு துறை மந்திரி
ஈரான் சிறை பிடித்த 18 இந்தியர்களும் விரைவில் விடுவிக்கப்படுவார்கள் என வெளியுறவு துறை மந்திரி தெரிவித்துள்ளார்.