மக்களவையில் அணை பாதுகாப்பு மசோதா குறித்து விவாதிக்க வேண்டும் - விடுதலை சிறுத்தைகள் எம்.பி. ஒத்திவைப்பு தீர்மானம்


மக்களவையில் அணை பாதுகாப்பு மசோதா குறித்து விவாதிக்க வேண்டும் - விடுதலை சிறுத்தைகள் எம்.பி. ஒத்திவைப்பு தீர்மானம்
x
தினத்தந்தி 18 July 2019 8:30 PM GMT (Updated: 18 July 2019 7:38 PM GMT)

மக்களவையில் அணை பாதுகாப்பு மசோதா குறித்து விவாதிக்க வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் எம்.பி. ஒத்திவைப்பு தீர்மானம் கொடுத்தார்.

புதுடெல்லி,

டெல்லியில் மத்திய மந்திரி சபை கூட்டம் நேற்றுமுன்தினம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், மக்களவையில் அணை பாதுகாப்பு மசோதா 2019’ அறிமுகம் செய்து சட்டமாக நிறைவேற்றுவது குறித்து முடிவு எடுக்கப்பட்டது.

தமிழ்நாட்டுக்கு சொந்தமான முல்லைப் பெரியாறு, பரம்பிக்குளம், துன்னகடவு, பெருவரிப்பள்ளம் ஆகிய 4 அணைகள் கேரளாவில் உள்ளன. மாநிலங்களுக்கு இடையிலான ஒப்பந்தங்களின்அடிப் படையில் இந்த 4 அணைகளையும் தமிழக அரசு பராமரித்து வருகிறது.

இந்தநிலையில் மத்திய அரசு கொண்டு வரும் புதிய மசோதா தமிழகத்துக்கு சொந்தமான இந்த அணைகளையும் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் எடுத்து கொள்ள வழிவகை செய்கிறது. எனவே மக்களவையில் பிற அலுவல்களை ஒத்திவைத்துவிட்டு, அணை பாதுகாப்பு மசோதா குறித்து விவாதிக்க வேண்டும் என்று விழுப்புரம் தொகுதி விடுதலை சிறுத்தைகள் கட்சி எம்.பி. ரவிக்குமார் ஒத்திவைப்பு தீர்மானம் கொடுத்துள்ளார்.

Next Story