தேசிய செய்திகள்

மேற்கு வங்காளத்தை சேர்ந்த நடிகர்-நடிகைகள் பா.ஜனதாவில் இணைந்தனர் + "||" + Actor-actresses from West Bengal have joined BJP

மேற்கு வங்காளத்தை சேர்ந்த நடிகர்-நடிகைகள் பா.ஜனதாவில் இணைந்தனர்

மேற்கு வங்காளத்தை சேர்ந்த நடிகர்-நடிகைகள் பா.ஜனதாவில் இணைந்தனர்
மேற்கு வங்காளத்தை சேர்ந்த நடிகர்-நடிகைகள் பா.ஜனதாவில் தங்களை இணைத்துக் கொண்டனர்.
புதுடெல்லி,

நாடாளுமன்ற தேர்தல் கடந்த மார்ச் மாதம் அறிவிக்கப்பட்டதில் இருந்தே மேற்கு வங்காளத்தை சேர்ந்த ஏராளமான பிரபலங்கள் பா.ஜனதாவில் இணைந்து வருகின்றனர்.

இதில் காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ் கட்சிகளை சேர்ந்த எம்.எல்.ஏ.க்கள் மற்றும் தலைவர்களும் அடங்குவர்.


அதுவும் நாடாளுமன்ற தேர்தலில் மாநிலத்தில் பா.ஜனதா கணிசமான இடங்களை பெற்றதை தொடர்ந்து இந்த சம்பவங்கள் மேலும் அதிகரித்து வருகின்றன. அந்த வரிசையில் வங்காள மொழி நடிகர்-நடிகையர் 12 பேர் நேற்று பா.ஜனதாவில் இணைந்தனர்.

இதில் ரிஷி கவுசிக், காஞ்சனா மொய்த்ரா, ருபஞ்சனா மித்ரா, பிஸ்வஜித் கங்குலி ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள் ஆவர். சினிமா மற்றும் தொலைக்காட்சி தொடர்கள் மூலம் பிரபலமானவர்களாகிய அவர்கள் கட்சியின் மாநில தலைவரான திலிப் கோஷ் முன்னிலையில் டெல்லியில் இணைந்தனர். அவர்களை கட்சி நிர்வாகிகள் வரவேற்றனர்.


தொடர்புடைய செய்திகள்

1. மேற்கு வங்காளத்தில் பா.ஜனதா தலைவர் குண்டு வீசிக்கொலை
மேற்கு வங்காளத்தில் பா.ஜனதா தலைவர் குண்டு வீசிக்கொல்லப்பட்டார்.
2. மேற்கு வங்காளத்துடன் 4 ஆண்டு கால மோதலுக்கு பிறகு ‘ஒடிசா ரசகுலா’ புவிசார் குறியீடு பெற்றது
மேற்கு வங்காளத்துடன் 4 ஆண்டு கால மோதலுக்கு பிறகு ‘ஒடிசா ரசகுலா’ புவிசார் குறியீடு பெற்றுள்ளது.
3. மேற்கு வங்காள மாநிலத்தின் பெயரை மாற்ற எந்த ஒரு திட்டமும் கிடையாது நாடாளுமன்றத்தில் மத்திய அமைச்சர் தகவல்
மேற்கு வங்காள மாநிலத்தின் பெயரை மாற்ற எந்த ஒரு திட்டமும் கிடையாது என நாடாளுமன்றத்தில் மத்திய அமைச்சர் தகவல் தெரிவித்துள்ளார்.
4. தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்று மேற்கு வங்காள காங்கிரஸ் தலைவர் ராஜினாமா
தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்று மேற்கு வங்காள காங்கிரஸ் தலைவர் ராஜினாமா செய்துள்ளார்.
5. மேற்கு வங்காளத்தில் போலீசுக்கு எதிராக பா.ஜனதாவினர் போராட்டம்
மேற்கு வங்காளத்தில் போலீசுக்கு எதிராக பா.ஜனதாவினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.