டெல்லி ஐகோர்ட்டில் ராபர்ட் வதேரா மனு வாபஸ்


டெல்லி ஐகோர்ட்டில் ராபர்ட் வதேரா மனு வாபஸ்
x
தினத்தந்தி 18 July 2019 10:08 PM GMT (Updated: 18 July 2019 10:08 PM GMT)

டெல்லி ஐகோர்ட்டில் ராபர்ட் வதேராவின் மனு வாபஸ் பெறப்பட்டது.

புதுடெல்லி,

காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா கணவர் ராபர்ட் வதேரா மீது சட்ட விரோத பண பரிமாற்ற தடைச்சட்டத்தின் கீழ் அமலாக்கப்பிரிவு வழக்கு பதிவு செய்துள்ளது.

லண்டன் பிரையன்ஸ்டன் சதுக்கத்தில் 1.9 மில்லியன் பவுண்ட் மதிப்பில் (சுமார் ரூ.16 கோடியே 34 லட்சம்) வீடு வாங்கியதில், சட்ட விரோதமாக பண பரிமாற்றம் செய்துள்ளார் என்று இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

ஆனால் தன்மீது அமலாக்கப்பிரிவு வலுக்கட்டாயமாக நடவடிக்கை எதுவும் எடுக்கக்கூடாது என உத்தரவிட வேண்டும் என்று ராபர்ட் வதேரா டெல்லி ஐகோர்ட்டில் ஒரு மனு தாக்கல் செய்தார்.

இதற்கிடையே, விசாரணை நீதிமன்றம் முன்ஜாமீன் வழங்கி விட்டதால், ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவை திரும்பப் பெறுவதாக நேற்று ராபர்ட் வதேரா தரப்பில் கூறப்பட்டது.

அதற்கு அனுமதி அளித்த நீதிபதிகள் மன்மோகன், சங்கீதா திங்க்ரா சேகல் ஆகியோர், அவருக்கு ஏற்கனவே முன்ஜாமீன் வழங்கப்பட்டு விட்டதால் இந்த மனு தள்ளுபடி செய்யப்படுவதாக அறிவித்தனர்.


Next Story