தேசிய செய்திகள்

பஸ்சுக்குள் குத்தாட்டம் போட்ட இளம் பெண் ; ஆ... என வேடிக்கை பார்த்த டிரைவர் சஸ்பெண்ட் + "||" + Girl Dance in DTC Bus on Sapna Choudhary's Song

பஸ்சுக்குள் குத்தாட்டம் போட்ட இளம் பெண் ; ஆ... என வேடிக்கை பார்த்த டிரைவர் சஸ்பெண்ட்

பஸ்சுக்குள் குத்தாட்டம் போட்ட இளம் பெண் ; ஆ... என வேடிக்கை பார்த்த  டிரைவர் சஸ்பெண்ட்
பஸ்சுககுள் குத்தாட்டம் போட்ட இளம் பெண்ணை ஆ... என வேடிக்கை பார்த்து கொண்டிருந்த டிரைவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டு உள்ளார்.
புதுடெல்லி

எப்போதும், ஏதாவது ட்ரெண்ட் ஆகி கொண்டிருக்கும் சமூக வலைத்தளத்தின் தற்போதைய டிரெண்டிங் 

டெல்லியில் பேருந்துக்குள் இளம் பெண் நடனமாடும் வீடியோ வெளியானதை அடுத்து அதன் ஓட்டுநர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்!

கடந்த 12 ஆம் தேதி டெல்லி நகர அரசு பேருந்துக்குள் இளம் பெண் ஒருவர்  ஏறியுள்ளார். பேருந்து டிப்போவிற்கு செல்லும் வரை அவர் இறங்கவில்லை. டிப்போ சென்ற போது திடீரென்று அவர்  நடனமாட தொடங்கினார். டைட்டாக உடையணிந்து  நடனமாடி கொண்டிருந்தார்.

அவரை கண்டிக்க வேண்டிய நிலையிலிருந்த பேருந்து ஓட்டுநர், நடத்துனர் மற்றும் மார்ஷல் ஆகியோர் கண்டிக்காமல் அவருடைய நடனத்தை ஆ..வென வேடிக்கை பார்ப்பது போன்றும் வீடியோ வெளியாகி  ட்ரெண்ட்டாகி உள்ளது.. இந்த வீடியோ சமூகவலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டதை அடுத்து, பேருந்தின் ஓட்டுநர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். நடத்துனருக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டது.

மார்ஷல் பொதுமக்கள் பாதுகாப்பு பிரிவுக்கு அனுப்பப்பட்டார். பொதுச் சொத்தை அங்கீகரிக்கப்படாத செயலுக்கு அனுமதித்தது, அதன்மூலம் டெல்லி போக்குவரத்துக்கு கழகத்தின் கண்ணியத்தைக் கெடுத்தது என அவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.தொடர்புடைய செய்திகள்

1. சிறு குழந்தையின் நடைகள்... காயத்தில் இருந்து மீண்டு வரும் வீடியோவை வெளியிட்ட ஹர்திக் பாண்ட்யா
இந்திய கிரிக்கெட் அணியின் ஆல் ரவுண்டரான ஹர்திக் பாண்ட்யா காயத்தில் இருந்து மீண்டு வரும் வீடியோவை வெளியிட்டு உள்ளார்.
2. ஆள் இல்லாத சக்கர நாற்காலி தானாக நகர்ந்து சாலையில் சென்றது
மருத்துவமனையின் வெளியில் நிறுத்தப்பட்டிருந்த சக்கர நாற்காலி ஒன்று தானாகப் புறப்பட்டு சாலையில் சென்று நின்ற வீடியோ காட்சிகள் வெளியாகி உள்ளன.
3. "மூன் வாக்" வீடியோ வைரலானதையடுத்து சாலை உடனடியாக சீரமைப்பு
பெங்களூருவில் குண்டும் குழியுமாக இருக்கும் சாலையை கிண்டல் செய்து வெளியிடப்பட்ட "மூன் வாக்" வீடியோ வைரலானதையடுத்து, அந்த சாலை சீரமைப்பு பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.
4. லிப்ட் ஒன்றில் சிக்கி கயிற்றால் கழுத்து இறுக்கப்பட்ட சகோதரனின் உயிரை காப்பாற்றிய சிறுமி - வீடியோ
லிப்ட் ஒன்றில் சிக்கி கயிற்றால் கழுத்து இறுக்கப்பட்ட சகோதரனின் உயிரை சிறுமி ஒருவர் காப்பாற்றி பாராட்டை பெற்று உள்ளார்.
5. கலவரத்தை தூண்டும் விதமாக ‘டிக்-டாக்கில்’ வீடியோ பதிவிட்டவர் கைது
கலவரத்தை தூண்டும் விதமாக ‘டிக்-டாக்கில்’ வீடியோ பதிவிட்டவரை போலீசார் கைது செய்தனர்.