இன்று மாலை 6 மணிக்குள் வாக்கெடுப்பு நடத்த வேண்டும் குமாரசாமிக்கு கர்நாடக ஆளுநர் மீண்டும் கெடு

இன்று மாலை 6 மணிக்குள் வாக்கெடுப்பு நடத்த வேண்டும்  குமாரசாமிக்கு கர்நாடக ஆளுநர் மீண்டும் கெடு
x
தினத்தந்தி 19 July 2019 10:48 AM GMT (Updated: 19 July 2019 10:48 AM GMT)

கர்நாடக சட்டப்பேரவையில் இன்று மாலை 6 மணிக்குள் வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என முதலமைச்சர் குமாரசாமிக்கு கர்நாடக ஆளுநர் வஜூபாய் வாலா மீண்டும் கெடு விதித்து உள்ளார்.

பெங்களூரு

மதியம் 1.30 மணிக்குள் பெரும்பான்மையை நிரூபிக்க கர்நாடக முதலமைச்சர் குமாரசாமிக்கு ஆளுநர் வலியுறுத்தி இருந்தார். நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த கோரி கர்நாடக ஆளுநர் விடுத்த காலக்கெடு நிறைவு பெற்றதைத் தொடர்ந்து வாதங்கள் நடைபெற்றது.

இன்னும் 20 உறுப்பினர்கள், தீர்மானத்தின் மீது பேச இருப்பதால், திங்கள் கிழமை வரை விவாதம் தொடரும் கூறப்பட்டு உள்ளது.
விவாதம் முடிந்த பிறகே குரல் வாக்கெடுப்பு நடத்தப்படும் என்று சபாநாயகர் திட்டவட்டமாக அறிவித்தார்.விவாதம் முடியாமல் வாக்கெடுப்பு நடத்த முடியாது என்று சபாநாயகர் கூறினார்.

ஒத்திவைக்கப்பட்ட கர்நாடக சட்டப்பேரவை  மீண்டும் 3 மணிக்கு கூடியது 

கர்நாடக சட்டப்பேரவையில் இன்று மாலை 6 மணிக்குள் வாக்கெடுப்பு நடத்த வேண்டும்  என  முதலமைச்சர் குமாரசாமிக்கு கர்நாடக ஆளுநர் வஜூபாய் வாலா மீண்டும் கெடு விதித்து உள்ளார். 

Next Story