தேசிய செய்திகள்

ரூ.3000 ஆயிரம் காணவில்லை; கணவரை துளைத்த மனைவி : ஆத்திரத்தில் மூக்கை கடித்து குதறிய கணவர் + "||" + Tiff over money: Ahmedabad man bites wife’s nose

ரூ.3000 ஆயிரம் காணவில்லை; கணவரை துளைத்த மனைவி : ஆத்திரத்தில் மூக்கை கடித்து குதறிய கணவர்

ரூ.3000 ஆயிரம் காணவில்லை; கணவரை துளைத்த மனைவி : ஆத்திரத்தில் மூக்கை கடித்து குதறிய கணவர்
குஜராத்தில் மனைவியின் மூக்கை கணவர் கடித்து குதறிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
அகமதாபாத்,

குஜராத் மாநிலம் அகமதாபாத் அருகே கோடாசர் பகுதியை சேர்ந்தவர் ரேஷ்மா குல்வானி (வயது 40). இவர் தனியார் நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வருகிறார். 

இவரது கணவர் கைலாஷ் குமார். இவர் சில மாதங்களாக வேலை இல்லாமல் இருந்து வந்துள்ளார். இந்த தம்பதிக்கு 3 குழந்தைகள் உள்ளனர்.  சமீப காலமாக  வேலையில்லாத காரணத்தினால் கைலாஷ்குமார் மனவிரக்தியில் இருந்துள்ளார். 

இந்நிலையில் குல்வானியின் பர்சில் வைத்து இருந்த ரூ.3000 திடீரென காணாமல் போனது.  இது குறித்து குல்வானி தனது கணவரிடம் கேட்டுள்ளார். இதனால் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு சண்டையில் முடிந்தது.  கைலாஷ்குமாருக்கு கோபம் தலைக்கு ஏறவே செய்வது அறியாமல் மனைவியை கீழே தள்ளி அவரை கடுமையாக தாக்கி பின்னர் மூக்கை கடித்து குதறியுள்ளார். 

வலியால் அலறி துடித்த குல்வானியை அக்கம் பக்கத்தில் வசித்து வந்தவர்கள் அவரை மீட்டு மருத்துவமனையில் கொண்டு போய் சேர்த்தனர். அங்கு அவருக்கு 25 தையல்கள் போடப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனை தொடர்ந்து குல்வானி அளித்த புகாரின் பேரில் கைலாஷை போலீசார் கைது செய்தனர். 

பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.