தேசிய செய்திகள்

தென்மேற்குப் பருவமழை கேரள மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் + "||" + Heavy rain to continue in Kerala till Tuesday, high alert in districts

தென்மேற்குப் பருவமழை கேரள மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்

தென்மேற்குப் பருவமழை கேரள மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்
தென்மேற்குப் பருவமழை கேரள மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
திருவனந்தபுரம்

கேரளத்தில் தென்மேற்குப் பருவமழை வெளுத்து வாங்குகிறது. நேற்று கண்ணூர் உள்ளிட்ட பகுதிகள் வெள்ளத்தில் மிதக்கிறது. கேரளாவில் பலத்த மழை தொடர்ந்து வருவதால், இடுக்கி, கோழிக்கோடு, வயநாடு மற்றும் காசரகோடு மாவட்டங்களில் உள்ள மாவட்ட நிர்வாகங்கள் ரெட் அலர்ட் விட்டு  மக்களை எச்சரித்துள்ளன, ஜூலை 23 வரை அதிக மழை பெய்யும் என்று இந்திய வானிலை மையம் கணித்துள்ளது.

பலத்த காற்று காரணமாக மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. வடமேற்கு திசை வேகத்தில் இருந்து பலத்த காற்று 40-50 கிமீ வேகத்தை எட்டும். பலத்த மழை காரணமாக அருவிகரா அணை திறந்து விடப்பட்டு உள்ளது.

சபரிமலை ஐயப்பன் கோவில் அமைந்துள்ள பத்தினம்திட்டா மாவட்டத்தில் கனமழை காரணமாக, கோவிலுக்கு செல்லும் பக்தர்கள் அவதிக்கு ஆளாகினர். பம்பை ஆற்றில் குளிக்கும் பக்தர்கள் எச்சரிக்கையோடு இருக்குமாறும் காவல்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர். கனமழை முதல் மிக கனமழை பெய்யும் என்பதைக் குறிக்கும் வகையில், காசர்கோடு மாவட்டத்திற்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மீனாட்சி மற்றும் மணிமாலா நதிகள் பல பகுதிகளில் நிரம்பி வழிகின்றன.இடுக்கியின் பல்வேறு பகுதிகளிலும்  மண் சரிவுகள் ஏற்பட்டு உள்ளன.

இந்திய வானிலை மையம் 22 வரை ரெட் அலர்ட்  எச்சரிக்கை விடுத்துள்ளது, 20 செ.மீ க்கும் அதிகமான மழை பெய்யும் என்று எச்சரித்து உள்ளது

இடுக்கி, கண்ணூர், கோழிக்கோடு, மலப்புரம், வயநாடு மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.  இடுக்கி , கோழிக்கோடு மற்றும் வயநாடு மாவட்டங்களுக்கு நாளை மற்றும் நாளை மறுநாளும் ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. மலப்புரம், கண்ணூர் மாவட்டங்களுக்கு நாளை ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

திருவனந்தபுரம், கொல்லம், பத்தினம்திட்டா, ஆலப்புழா, கோட்டயம், எர்ணாகுளம், திருச்சூர், மற்றும் பாலக்காடு மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட்  எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ரெட் அலர்ட் என்பது பாதிக்கப்படக்கூடிய பகுதிகளிலிருந்து மக்களை தங்குமிடம் முகாம்களுக்கு வெளியேற்றுவதற்கும், மற்றவர்களுக்கு அவசரகால கருவிகளை வழங்குவதற்கும் உடனடியாக தடுப்பு நடவடிக்கைகளை எடுப்பதற்கான அழைப்பு ஆகும்.

தொடர்புடைய செய்திகள்

1. கேரளாவில் வெள்ளம்: பலி எண்ணிக்கை 111 ஆக உயர்வு - 31 பேரை காணவில்லை
கேரளாவில் கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 111 ஆக உயர்ந்தது. மேலும் 31 பேரை காணவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2. வெள்ள பாதிப்பில் இருந்து படிப்படியாக இயல்பு நிலைக்கு திரும்பி வரும் கேரளா
வெள்ள பாதிப்பில் இருந்து கேரளா படிப்படியாக இயல்பு நிலைக்கு திரும்பி வருகிறது.
3. கேரளாவில் மழைக்கு பலி 95 ஆக உயர்வு - இறந்தவர் குடும்பத்துக்கு ரூ.4 லட்சம் வழங்க உத்தரவு
கேரளாவில் மழைக்கு பலி எண்ணிக்கை 95 ஆக உயர்ந்துள்ளது. இறந்தவர் குடும்பத்துக்கு ரூ.4 லட்சம் வழங்க முதல்-மந்திரி பினராயி விஜயன் உத்தரவிட்டுள்ளார்.
4. கேரளாவில் ஐந்து மாவட்டங்களில் மீண்டும் கனமழை பெய்வதற்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை
கேரளாவில் ஐந்து மாவட்டங்களில் மீண்டும் கனமழை பெய்வதற்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
5. கேரளா; மலப்புரம், கோழிக்கோடு பகுதிகளில் கனமழை பெய்யும் என எச்சரிக்கை
கேரளாவில் மலப்புரம், கோழிக்கோடு ஆகிய மாவட்டங்களுக்கு இன்று ரெட் அலெர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.