தேசிய செய்திகள்

எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி துப்பாக்கிச்சூடு + "||" + Pak troops violate ceasefire in J-K's Poonch

எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி துப்பாக்கிச்சூடு

எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி துப்பாக்கிச்சூடு
எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி துப்பாக்கிச்சூடு நடத்தியது.
ஜம்மு, 

ஜம்மு காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் உள்ள எல்லைக்கட்டுப்பாட்டு பகுதியில், போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி பாகிஸ்தான் ராணுவம் துப்பாக்கிச்சூடு நடத்தியது. பாகிஸ்தான் ராணுவத்தின் துப்பாக்கிச்சூட்டிற்கு இந்திய ராணுவமும் தக்க பதிலடி கொடுத்தது.  

இந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்தால், எல்லையோர மக்கள் பீதி அடைந்தனர்.  உயிரிழப்புகளை தவிர்ப்பதற்காக, எல்லையோர கிராமங்களில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டனர். இந்த துப்பாக்கிச்சூட்டில் வீரர்கள் யாருக்கும் பாதிப்பு இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ராஜ்நாத்சிங் இன்று காஷ்மீர் வரவுள்ள நிலையில், எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளது.