தேசிய செய்திகள்

சாக்கடைக்குள் குழந்தையை வீசி விட்டு சென்ற பெண்: கவரோடு வெளியே இழுத்துக் காப்பாற்றிய தெரு நாய்கள் + "||" + A woman was captured on camera throwing a baby girl wrapped in a plastic in the drain in Kaithal

சாக்கடைக்குள் குழந்தையை வீசி விட்டு சென்ற பெண்: கவரோடு வெளியே இழுத்துக் காப்பாற்றிய தெரு நாய்கள்

சாக்கடைக்குள் குழந்தையை வீசி விட்டு சென்ற பெண்: கவரோடு வெளியே இழுத்துக் காப்பாற்றிய தெரு நாய்கள்
அரியானாவில் சாக்கடைக்குள் வீசப்பட்ட குழந்தையை தெரு நாய்கள் கவரோடு வெளியே இழுத்து காப்பாற்றும் காட்சிகள் வெளியாகியுள்ளன.
சண்டிகார்,

அரியானா மாநிலம் கைத்தல் என்ற இடத்தில் அதிகாலை 4 மணி அளவில் பெண் ஒருவர் பிளாஸ்டிக் கவரால் சுற்றப்பட்ட குழந்தையை தூக்கி வந்து அங்கு இருந்த சாக்கடையில் வீசி விட்டு சென்றார். 

சற்று நேரத்தில் அந்த பகுதியில் சுற்றித் திரிந்த தெரு நாய்கள் குழந்தையை கவரோடு வெளியே இழுத்து உள்ளது. அவை குரைத்து பொதுமக்கள் கவனத்தை ஈர்த்தது. உடனே அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் அக்குழந்தையை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர்.  

குழந்தை உயிரோடு இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். ஆனால் குழந்தை ஆபத்தான நிலையில் இருப்பதால் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக குறிப்பிட்டுள்ளனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.