தேசிய செய்திகள்

நொய்டாவில் அதிரடி; சாலையோரம் மது அருந்திய 36 பேர் பிடிபட்டனர் + "||" + Action in Noida; 36 people were caught drinking alcohol on a roadside

நொய்டாவில் அதிரடி; சாலையோரம் மது அருந்திய 36 பேர் பிடிபட்டனர்

நொய்டாவில் அதிரடி; சாலையோரம் மது அருந்திய 36 பேர் பிடிபட்டனர்
நொய்டாவில் சாலையோரம் மது அருந்திய 36 பேரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.
நொய்டா,

தலைநகரான டெல்லி அருகே உள்ள நொய்டா தொழில் நகரமாகும். இங்கு சாலை விதிகளை ஒழுங்குபடுத்தவும், பொதுமக்களுக்கு இடையூறு விளைவிப்பதை தடுக்கவும் போலீசார் சில அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். இதையடுத்து தனிப்படைகள் அமைத்து 2 பிரிவாக போலீசார் சோதனை நடத்தினர். நேற்று முன்தினம் நடத்திய இந்த சோதனையில் சாலையோரங்களில் மது அருந்திவிட்டு பொதுமக்களுக்கு இடையூறு செய்ததாக 36 பேரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.


இது குறித்து கவுதம்புத் நகர், சீனியர் போலீஸ் சூப்பிரண்டு வைபவ் கிருஷ்ணா கூறுகையில், “சமூகத்தில் சட்டம்-ஒழுங்கை நிலைநாட்ட சாலைகளில் விதிமுறைகள் கடைப்பிடிக்க வேண்டும். அதன் அடிப்படையில் இதுபோன்ற நடவடிக்கைகள் தொடரும்” என்று தெரிவித்தார். மேலும் இதே போன்று கடந்த 6-ந் தேதி நடந்த சோதனையில் பொது இடங்களில் மது அருந்தியதாக 474 பேரை போலீசார் கைது செய்தது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

1. வாக்காளர்களுக்கு பணம், மது கொடுத்த விவகாரம்: அ.தி.மு.க. வேட்பாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் - கலெக்டரிடம் பொதுமக்கள் மனு
திருப்பூரில், நாடாளுமன்ற தேர்தலில் வாக்காளர்களுக்கு பணம், மது கொடுத்த விவகா ரத்தில் அ.தி.மு.க. வேட்பாளர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் மற்றும் நிர்வாகிகள் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி பொதுமக்கள் கலெக்டரிடம் மனு கொடுத்தனர்.
2. மனைவியை கவர அதிரடியாக ஆடுகிறேன் - ரஸ்செல் ருசிகரம்
மனைவியை கவருவதற்காக, தான் அதிரடியாக ஆடுவதாக ரஸ்செல் தெரிவித்தார்.
3. முதுமலையில் வறட்சி, சாலையோரங்களில் உலா வரும் வனவிலங்குகள்
முதுமலையில் வறட்சி காரணமாக உணவு தேடி சாலையோரங்களில் வனவிலங்குகள் உலா வருகின்றன.