34 நதிகளை தூய்மைப்படுத்த ரூ.5,870 கோடி ஒதுக்கீடு - மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம்


34 நதிகளை தூய்மைப்படுத்த ரூ.5,870 கோடி ஒதுக்கீடு -  மத்திய  சுற்றுச்சூழல் அமைச்சகம்
x
தினத்தந்தி 21 July 2019 1:23 PM GMT (Updated: 21 July 2019 1:23 PM GMT)

16 மாநிலங்களில் மாசடைந்துள்ள 34 நதிகளை தூய்மைப்படுத்த ரூ.5,870 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் தெரிவித்துள்ளது.


மத்திய சுற்றுச்சூழல் மந்திரி பாபுல் சுப்ரியோ நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ள தகவலில், தேசிய நதிகள் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் 16 மாநிலங்களில் மாசடைந்த 34 நதிகளை தூய்மைப்படுத்த ரூ.5,870 கோடி ஒதுக்கப்பட்டு உள்ளது, இதில் மத்திய அரசு தனது பங்காக மாநிலங்களுக்கு ரூ.2,522 கோடி வழங்கி வழங்கப்பட்டுள்ளது எனக் குறிப்பிட்டுள்ளார். நகர்ப்புற பகுதிகளில் நதிகள் அதிக அளவில் மாசடைவதாகவும், எனவே அவற்றை தூய்மைப்படுத்த நிதி உதவி தேவைப்படுவதாகவும் மாநிலங்கள் கேட்டுக்கொண்டதை தொடர்ந்து, கங்கை நீங்கலாக 34 நதிகளை தூய்மைப்படுத்த ரூ.5,870 கோடி ஒதுக்கப்பட்டு இருப்பதாக குறிப்பிட்டுள்ளார். 

Next Story