தேசிய செய்திகள்

குஜராத் மந்திரிக்கு கொலை மிரட்டல் - பெண் கைது + "||" + To Gujarat minister kill threatened - Woman arrested

குஜராத் மந்திரிக்கு கொலை மிரட்டல் - பெண் கைது

குஜராத் மந்திரிக்கு கொலை மிரட்டல் - பெண் கைது
குஜராத் மந்திரிக்கு கொலை மிரட்டல் விடுத்த பெண் கைது செய்யப்பட்டார்.
பர்தோலி,

குஜராத் மாநிலத்தில் சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை மந்திரியாக இருப்பவர் ஈஸ்வர் பர்மர். இவருக்கு கடந்த மாதம் 28-ந் தேதி மற்றும் கடந்த 15-ந் தேதிகளில் மிரட்டல் கடிதங்கள் வந்தது. அதில், ‘ரூ.1½ கோடி கொடுக்காவிட்டால், உங்களையும், உங்கள் குடும்பத்தினரையும் கொலை செய்வேன்’ என கூறப்பட்டு இருந்தது.


இதுதொடர்பாக பர்தோலி போலீசார் வழக்குப்பதிவு செய்து, மிரட்டல் கடிதம் அனுப்பியதாக பர்வீனா மைசூரியா என்ற பெண்ணை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.