தேசிய செய்திகள்

இந்தியாவில் மேலும் ஒரு ஆண்டு தங்க தஸ்லிமா நஸ்ரீனுக்கு அனுமதி + "||" + Taslima Nasreen allowed to stay one more year in India

இந்தியாவில் மேலும் ஒரு ஆண்டு தங்க தஸ்லிமா நஸ்ரீனுக்கு அனுமதி

இந்தியாவில் மேலும் ஒரு ஆண்டு தங்க தஸ்லிமா நஸ்ரீனுக்கு அனுமதி
இந்தியாவில் மேலும் ஒரு ஆண்டு தங்க தஸ்லிமா நஸ்ரீனுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
புதுடெல்லி,

வங்காளதேசத்தை சேர்ந்த பெண் எழுத்தாளர் தஸ்லிமா நஸ்ரீன். சுவீடன் நாட்டு குடியுரிமை பெற்றுள்ள இவர் சர்ச்சைக்குரிய எழுத்தாளர் ஆவார். கடந்த 2004-ம் ஆண்டு முதல் தஸ்லிமா நஸ்ரீன் இந்தியாவில் தங்கி உள்ளார்.


இவரது குடியுரிமை அனுமதி இந்த மாதத்துடன் முடிவடைகிறது. இந்தநிலையில் தஸ்லிமா நஸ்ரீனின் குடியுரிமை அனுமதியை அடுத்த ஆண்டு (2020) ஜூலை மாதம் வரை மேலும் ஓராண்டுக்கு நீட்டித்து மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.