ஆந்திர ஐகோர்ட்டு தலைமை நீதிபதி நியமனம்: சுப்ரீம் கோர்ட்டு ‘கொலீஜியம்’ மறுபரிசீலனை செய்ய வேண்டும் - மத்திய அரசு வேண்டுகோள்


ஆந்திர ஐகோர்ட்டு தலைமை நீதிபதி நியமனம்: சுப்ரீம் கோர்ட்டு ‘கொலீஜியம்’ மறுபரிசீலனை செய்ய வேண்டும் - மத்திய அரசு வேண்டுகோள்
x
தினத்தந்தி 21 July 2019 9:46 PM GMT (Updated: 21 July 2019 9:46 PM GMT)

ஆந்திர ஐகோர்ட்டு தலைமை நீதிபதி நியமனம் தொடர்பாக, சுப்ரீம் கோர்ட்டு ‘கொலீஜியம்’ மறுபரிசீலனை செய்ய வேண்டும் என மத்திய அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது.

புதுடெல்லி,

சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான ‘கொலீஜியம்’, அலகாபாத் ஐகோர்ட்டு நீதிபதி விக்ரம்நாத்தை ஆந்திர ஐகோர்ட்டு தலைமை நீதிபதியாக பதவி உயர்வுடன் நியமிப்பதற்கு மத்திய அரசுக்கு பரிந்துரைத்தது. கடந்த மாதம் இந்த கோப்பை மத்திய அரசு திருப்பி அனுப்பியது. நீதிபதி விக்ரம்நாத் நியமனம் தொடர்பான கருத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று மத்திய அரசு கொலீஜியத்தை கேட்டுக்கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.

மக்களவையில் சில நாட்கள் முன்பு சட்ட மந்திரி ரவிசங்கர் பிரசாத் ஒரு கேள்விக்கு பதில் அளிக்கும்போது, “சுப்ரீம் கோர்ட்டு ‘கொலீஜியம்’ ஐகோர்ட்டு தலைமை நீதிபதிகள் நியமனம் தொடர்பாக அனுப்பிய 9 பரிந்துரைகளில் 7 ஏற்றுக்கொள்ளப்பட்டது. ஆந்திரா, மத்தியபிரதேச மாநில தலைமை நீதிபதிகள் நியமனம் தொடர்பான 2 பரிந்துரைகள் பரிசீலனையில் இருக்கிறது” என்று கூறியது குறிப்பிடத்தக்கது.

Next Story