நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்த 2 நாட்கள் அவகாசம் வேண்டும் -குமாரசாமி சபாநாயகரிடம் கோரிக்கை


நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்த 2 நாட்கள் அவகாசம் வேண்டும் -குமாரசாமி சபாநாயகரிடம் கோரிக்கை
x
தினத்தந்தி 22 July 2019 6:38 AM GMT (Updated: 22 July 2019 6:38 AM GMT)

நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்த 2 நாட்கள் அவகாசம் வேண்டும் என கர்நாடக முதல்வர் குமாரசாமி சபாநாயகரிடம் கோரிக்கை வைத்து உள்ளார்.

பெங்களூரு, 

கர்நாடகாவில் 2 வாரங்களாக உச்சகட்ட அரசியல் குழப்பம் நிலவி வருகிறது.  இத்தகைய பரபரப்புக்கு மத்தியில் கர்நாடக சட்டசபையின் மழைக்கால கூட்டத்தொடர் கடந்த 12-ந்தேதி தொடங்கியது. அன்று  சட்டசபையில் பேசிய முதல்-மந்திரி குமாரசாமி, நம்பிக்கை வாக்கெடுப்புக்கு தயார் என அறிவித்தார்.

அதைத்தொடர்ந்து கடந்த 18-ந் தேதி முதல்-மந்திரி குமாரசாமி சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்புக்கான தீர்மானத்தை தாக்கல் செய்தார். அதன் மீது 2 நாட்கள் விவாதம் நடந்தது. கவர்னர் 2 தடவை கெடு விதித்தும், வாக்கெடுப்பு நடக்கவில்லை. சபை இன்று ஒத்திவைக்கப்பட்டது.

இந்த நிலையில் கர்நாடக சட்டசபை 2 நாட்கள் விடுமுறைக்கு பிறகு மீண்டும் இன்று காலை கூடும் என கூறப்பட்டது. தற்போதுவரை சபை கூட வில்லை.
சபை கூடியதும் நம்பிக்கை வாக்கெடுப்பு தீர்மானத்தின் மீதான விவாதம் நடைபெறும். இதில் எம்.எல்.ஏ.க்கள் பங்கேற்று பேசுவார்கள். இறுதியில் முதல்-மந்திரி குமாரசாமி பேசுவார். அவர் பேசி முடித்த பிறகு இன்று மாலை 6  மணிக்கு நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறும் என்று சபாநாயகர் ரமேஷ் குமார் தெரிவித்துள்ளார். 

இந்த நிலையில், பெரும்பான்மையை நிரூபிக்க நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்த 2 நாட்கள் அவகாசம் வேண்டும் என்று என்று கர்நாடக முதல்வர்  குமாரசாமி  சபாநாயகர் ரமேஷ்குமாரிடம் கோரிக்கை வைத்து உள்ளார்.

Next Story