தேசிய செய்திகள்

டெல்லியில் அமித்ஷாவுடன், துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் சந்திப்பு + "||" + Deputy Chief Minister Pannirselvam meets with Amit Shah in Delhi

டெல்லியில் அமித்ஷாவுடன், துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் சந்திப்பு

டெல்லியில் அமித்ஷாவுடன், துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் சந்திப்பு
டெல்லியில் அமித்ஷாவை துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் சந்தித்து பேசினார்.
புதுடெல்லி:

துணை முதல்-மந்திரியும், அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வம் நேற்று மாலை டெல்லி புறப்பட்டு சென்றார்.

மத்திய உள்துறை அமைச்சர்  அமித்ஷாவை ஓ.பன்னீர்செல்வம்  இன்று சந்தித்து பேசினார்.  தற்போதைய அரசியல் நிலவரம் உள்பட பல்வேறு வி‌ஷயங்கள் குறித்து அமித் ஷாவிடம் அவர் ஆலோசித்ததாக  கூறப்படுகிறது.

பாராளுமன்ற தேர்தல் முடிந்த பிறகு முதல்-அமைச்சர் எடப்பாடி மற்றும் அமைச்சர்கள் பிரதமர் மோடி மற்றும் அமித்ஷாவை சந்தித்து இருந்தனர்.

கட்சியின் முக்கிய நிர்வாகிகள் அமித்ஷாவை அடுத்தடுத்து சந்தித்த நிலையில் ஓ.பன்னீர்செல்வம் மரியாதை நிமித்தமாக சந்தித்தார்.

பாராளுமன்ற வளாகத்தில் மத்திய மந்திரிகளையும் பன்னீர்செல்வம் சந்தித்தார்.