வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நாள் இன்று ; திட்டத்திற்கு உழைத்த அனைவருக்கும் எனது சல்யூட் -சிவன்


வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நாள் இன்று ; திட்டத்திற்கு உழைத்த அனைவருக்கும் எனது சல்யூட் -சிவன்
x
தினத்தந்தி 22 July 2019 9:56 AM GMT (Updated: 22 July 2019 9:56 AM GMT)

வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நாள் இன்று; திட்டத்திற்கு உழைத்த அனைவருக்கும் எனது சல்யூட் என இஸ்ரோ தலைவர் சிவன் கூறினார்.

பெங்களூரு

இஸ்ரோ தலைவர் சிவன் பேசும்போது கூறியதாவது:-

சந்திரயான் 2 விண்கலத்தை பூமி சுற்றுப்பாதையில் செலுத்தியதாக அறிவிப்பதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். சோதனைகளை முறியடித்து சந்திரயான்-2 விண்ணில் பறந்துள்ளது. நிலவின் தென் துருவத்தில் சந்திரயான் - 2 கால் பதிக்கும்.

கடந்த ஒன்றரை ஆண்டுகள் சிறிதும் ஓய்வின்றி சந்திரயான் 2-க்காக இஸ்ரோ விஞ்ஞானிகள் அனைவரும் உழைத்தனர். அவர்கள் உழைப்பால் தான் இன்று இந்த சாதனை நடந்துள்ளது.

இஸ்ரோ விஞ்ஞானிகளின் கடுமையான உழைப்பிற்கு கிடைத்த வெற்றி இது. வெற்றிக்கு உழைத்த அனைத்து தரப்பினருக்கும் எனது பாராட்டுக்கள், வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நாள் இன்று. சந்திரயான் 2 திட்டத்திற்கு உழைத்த அனைவருக்கும் எனது சல்யூட். அடுத்தடுத்து பல செயற்கைகோள்களை ஏவ திட்டமிட்டுள்ளோம் என கூறினார்.

Next Story