புவி வட்டப் பாதையில் சந்திரயான் 2 விண்கலம் விடுவிக்கப்பட்டபோது... எடுக்கப்பட்ட படம்


புவி வட்டப் பாதையில் சந்திரயான் 2 விண்கலம் விடுவிக்கப்பட்டபோது... எடுக்கப்பட்ட படம்
x
தினத்தந்தி 22 July 2019 11:21 AM GMT (Updated: 22 July 2019 12:15 PM GMT)

புவி வட்டப் பாதையில் சந்திரயான் 2 விண்கலம் விடுவிக்கப்பட்டபோது எடுகப்பட்ட புகைப்படம் வெளியிடப்பட்டு உள்ளது.

பெங்களூரு

2019 ஜூலை 22-ந்தேதி இந்திய வரலாற்றின் முக்கிய நாளாகும். மதியம் 2.43 மணிக்கு சந்திரயான் 2 ஜிஎஸ்எல்வி மார்க் 3 ராக்கெட்டின் மூலம் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டு 16-ஆவது நிமிடத்தில் புவி வட்டப் பாதையை அடைந்தது. தொடர்ந்து 47 நாட்கள் பயணிக்கும் சந்திரயான்-2 விண்கலம், நிலவை சென்றடைந்த பின்னர், அதிலிருந்து நிலவில் தரையிறங்கும் விக்ரம் விண்கலம் பிரியும். விக்ரம் விண்கலம் நிலவில் தரையிறங்கிய நான்கு மணி நேரத்திற்கு பின்னர், அதிலிருந்து நிலவில் ஊர்ந்து சென்று ஆராயும். பிரக்யான் விண்கலம், நிலாவில் இறங்கி ஆராயும் பணியை தொடங்கும். விக்ரம், பிரக்யான் விண்கலங்கள் 14 நாட்கள் ஆய்வு பணியில் ஈடுபட்டு தகவல்களை இஸ்ரோ கட்டுப்பாட்டு மையத்திற்கு அனுப்பும். இதே நேரத்தில் சந்திரயான்-2 விண்கலம் ஓராண்டு காலம் நிலவை சுற்றி, சுற்றி வந்து ஆய்வில் ஈடுபடும்.

இந்த ஆய்வின் மூலம் நிலவின் தென்துருவத்தில் தண்ணீர் உள்ளதா,வேறு என்னென்ன கனிமங்கள் உள்ளன. நிலவின் தட்பவெப்பம் உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் திரட்டப்பட உள்ளன. நிலவில் விக்ரம், பிரக்யான் கலங்கள்  திட்டமிட்டபடி தரையிறங்கினால், அமெரிக்கா, ரஷ்யா, சீனாவுக்கு பின்னர் இது போன்ற ஆய்வில் ஈடுபட்ட நான்காவது நாடு என்ற பெருமையை இந்தியா பெறும்.

இதுவரை அமெரிக்கா, சைனா, [ஈசா] ஐரோப்பிய கூட்டமைப்பு,  ஆகிய மூன்று நாடுகள்தான் வெற்றிகரமாய்ச் செய்துள்ளன. இஸ்ரேல் சமீபத்தில் முயன்று, விண்கலம் இறங்கத் தவறி நிலவில் வீழ்ந்து முறிந்து போனது. அடுத்து இந்தியா வெற்றிகரமாகச் செய்து முடித்தால், நான்காவது நாடாய் வரலாற்று முக்கியத்துவம்  பெறும்.

இதுவரை நிலவில் எந்த உலக நாட்டு விண்கலமும் இறங்காத தென் துருவப்  பகுதியில் சந்திரயான்-2 விண்கலம் முதன்முதல் இறங்கப் போகிறது.

இதனிடையே, இஸ்ரோ டிவிட்டர் பக்கத்தில், சந்திரயான்-2 தொடர்பான  தகவல்கள் உடனுக்குடன் வெளியிடப்பட்டு வந்தன. அதில் ஷேர் செய்யப்பட்ட ஒரு படம், ஜிஎஸ்எல்வி ராக்கெட்டிலிருந்து புவி வட்டப் பாதையில் சந்திரயான் 2 விண்கலம் விடுவிக்கப்பட்டபோது எடுக்கப்பட்டதாகும்.

இந்த ஸ்டேஜ் என்பது சந்திரயான்-2 பயணத்தில் முக்கியமான கட்டம். எனவே இது வரலாற்று சிறப்புமிக்க புகைப்படம் என்றால் அது மிகையான வார்த்தை கிடையாது.

புவி சுற்று வட்டப் பாதை, பூமியின் தரைப்பகுதியிலிருந்து சுமார் 170 கி.மீ உயரத்தில் இருக்க கூடிய பகுதியாகும். ஜிஎஸ்எல்வி ராக்கெட் அங்கு சென்றடைய 14 நிமிடங்கள் மற்றும் 59 வினாடிகள் ஆகியது.

Next Story