தேசிய செய்திகள்

நாங்குநேரி தொகுதி தேர்தல் செலவு தொடர்பான மனு - சுப்ரீம் கோர்ட்டில் தள்ளுபடி + "||" + Petition on election cost of Nankuneri constituency - Waiver of Supreme Court

நாங்குநேரி தொகுதி தேர்தல் செலவு தொடர்பான மனு - சுப்ரீம் கோர்ட்டில் தள்ளுபடி

நாங்குநேரி தொகுதி தேர்தல் செலவு தொடர்பான மனு - சுப்ரீம் கோர்ட்டில் தள்ளுபடி
வசந்தகுமார் எம்.எல்.ஏ. பதவி ராஜினாமா செய்ததால், நாங்குநேரி தொகுதி தேர்தல் செலவை அவரே ஏற்றுக்கொள்வது தொடர்பான மனுவினை சுப்ரீம் கோர்ட் தள்ளுபடி செய்தது.
புதுடெல்லி,

நாங்குநேரி சட்டமன்ற தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்த வசந்தகுமார் சமீபத்தில் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் கன்னியாகுமரி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இதைத்தொடர்ந்து அவர் நாங்குநேரி சட்டமன்ற தொகுதி எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்தார். இதனால் அங்கு இடைத்தேர்தல் அறிவிக்கும் சூழ்நிலை ஏற்பட்டு உள்ளது.


இந்த நிலையில், வசந்தகுமார் தனது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்ததால் நாங்குநேரி தொகுதி இடைத்தேர்தலுக்கான செலவை அவர் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று கோரி மதுரையைச் சேர்ந்த கே.கே.ரமேஷ் என்பவர் சுப்ரீம் கோர்ட்டில் மனு செய்து இருந்தார்.

இந்த மனு சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதிகள் ரோகின்டன் பாலி நாரிமன், சூரியகாந்த் ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில் வக்கீல் ஜெயசுகின் ஆஜரானார். விசாரணை தொடங்கியதும் மனுவை தள்ளுபடி செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

தொடர்புடைய செய்திகள்

1. குளித்தலை பெரியார் நகரில் சாக்கடை வசதி செய்து தர வேண்டும் நகராட்சி ஆணையரிடம் பொதுமக்கள் மனு
குளித்தலை பெரியார் நகரில் சாக்கடை வசதி செய்து தர வேண்டும் என நகராட்சி ஆணையரிடம் பொதுமக்கள் மனு கொடுத்தனர்.
2. திருநங்கைகளை துன்புறுத்துபவர்கள் மீது நடவடிக்கை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கலெக்டரிடம் மனு
புதுக்கோட்டை கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் திருநங்கைகளை துன்புறுத்துபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி திருநங்கைகள் கலெக்டரிடம் மனு அளித்தனர்.
3. பட்டா வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் மனு
பட்டா வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் மனு அளித்தனர்.
4. வீட்டுமனை பட்டா கேட்டு கிராம மக்கள் கலெக்டரிடம் மனு
வீட்டுமனை பட்டா கேட்டு கிராம மக்கள் கலெக்டர் ரத்னாவிடம் மனு அளித்தனர்.
5. திருப்பூரில் குடியிருப்பு பகுதியில் திராவக சேமிப்பு கிடங்கு அப்புறப்படுத்த கலெக்டரிடம் பொதுமக்கள் மனு
திருப்பூரில் குடியிருப்பு பகுதியில் உள்ள திராவக சேமிப்பு கிடங்கை அப்புறப்படுத்தக்கோரி கலெக்டரிடம் பொதுமக்கள் மனு கொடுத்தனர்.