ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு எதிரான தீர்மானம் : புதுச்சேரி சட்டசபையில் நிறைவேற்றம்


ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு எதிரான தீர்மானம் : புதுச்சேரி சட்டசபையில் நிறைவேற்றம்
x
தினத்தந்தி 23 July 2019 10:59 AM GMT (Updated: 23 July 2019 10:59 AM GMT)

ஹைட்ரோ கார்பனுக்கு எதிராக புதுச்சேரி சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

புதுச்சேரி

புதுச்சேரி சட்டசபை  சிறப்பு கூட்டம் இரண்டாவது நாளாக இன்று நடைபெற்று வருகிறது. சந்திரயான் 2 விண்கலத்தை ஏவி சாதனை படைத்த இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு அவையில் பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

அப்போது பேசிய முதலமைச்சர் நாராயணசாமி சந்திரயான்-2  விஞ்ஞானிகளுக்கு விருதுகள் வழங்க பிரதமரிடம் பரிந்துரை செய்யப்படும் என்று கூறினார்.

பின்னர் ஆளும் கட்சி எம்.எல்.ஏ. பாலன், எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த முதலமைச்சர், ஆளுநர் ஒப்புதலுக்காக அதிகாரிகள் காத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை என்றார்.

தொடர்ந்து பேசிய சபாநாயகர் சிவகொழுந்து, உயர்நீதிமன்ற உத்தரவுப்படி அதிகாரிகள் செயல்படவில்லை என்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தார். இதனிடையே, சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் ஹைட்ரோ கார்பன் திட்டத்தினை செயல்படுத்த வேண்டாம் என மத்திய அரசை கேட்டுக்கொள்ளும் தீர்மானம் சட்டப்பேரவையில் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது. 

Next Story