அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் செய்யப்படுவார்கள் - சித்தராமையா


அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் செய்யப்படுவார்கள் - சித்தராமையா
x
தினத்தந்தி 23 July 2019 12:32 PM GMT (Updated: 23 July 2019 12:32 PM GMT)

அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் செய்யப்படுவார்கள் என சித்தராமையா கூறியுள்ளார்.

கர்நாடக சட்டசபையில் முதல்-மந்திரி குமாரசாமி கொண்டு வந்த நம்பிக்கை தீர்மானம் மீது விவாதம் நடைபெற்று வருகிறது. இன்று மாலை தீர்மானம் மீது வாக்கெடுப்பு நடக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் காங்கிரஸ் தலைவர் சித்தராமையா பேசுகையில்,  ரூ. 25 கோடி, 30 கோடி, 50 கோடி என இவ்வளவு பணம் எங்கிருந்து வந்தது. அவர்கள் (அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள்) தகுதி நீக்கம் செய்யப்படுவார்கள். அவர்களுடைய அரசியல் முடிவுக்கு வரும். 2013-ம் ஆண்டில் இருந்து தோல்வியை தழுவி வருபவர்களுக்கு, தொடர்ந்து அதேதான் நிகழும். இங்கு பெரும் வர்த்தகம் தான் பிரச்சனையாகியுள்ளது. அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் வர்த்தகத்திற்கு சிக்கியுள்ளனர் எனக் கூறியுள்ளார். 

Next Story