தேசிய செய்திகள்

‘பத்ம’ விருது தேர்வு முறையில் மாற்றம் - மத்திய அரசு தகவல் + "||" + 'Padma' Award Selection mode change - Central Government Information

‘பத்ம’ விருது தேர்வு முறையில் மாற்றம் - மத்திய அரசு தகவல்

‘பத்ம’ விருது தேர்வு முறையில் மாற்றம் - மத்திய அரசு தகவல்
பத்ம விருது தேர்வு முறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்த தேர்வு முறை பிரதமரின் நேரடி பார்வையில் நடக்க உள்ளதாக மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது.
புதுடெல்லி,

நாடாளுமன்ற மக்களவையில், ‘பத்ம’ விருது குறித்து திரிணாமுல் காங்கிரஸ் உறுப்பினர் பிரசுன் பானர்ஜி எழுப்பிய கேள்விக்கு மத்திய உள்துறை இணை மந்திரி நித்யானந்த் ராய் பதில் அளித்தார்.

அவர் கூறியதாவது:- அதிகாரத்தில் உள்ளோருக்கு நெருக்கமானவர்களுக்கு மட்டுமே முன்பெல்லாம் ‘பத்ம’ விருதுகள் வழங்கப்பட்டன. ஆனால், இந்த அரசில், தேர்வு முறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. பிரதமரின் நேரடி பார்வையில் ஜனநாயக முறையில் தேர்வு நடக்கிறது. ஒவ்வொரு துறையிலும் திறமையாளர்கள் அடையாளம் காணப்பட்டு, தேர்வு செய்யப்படுகின்றனர். தனது துறையில் ஓய்வின்றி, சுயநலமின்றி கடமை ஆற்றுவோருக்குத்தான் விருது வழங்கப்படுகிறது. சுதந்திர இந்தியாவில் முதல்முறையாக, 10 விவசாயிகளுக்கு விருது வழங்கி உள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.