மக்களவையில் சம்பள சட்ட மசோதா தாக்கல்


மக்களவையில் சம்பள சட்ட மசோதா தாக்கல்
x
தினத்தந்தி 23 July 2019 9:30 PM GMT (Updated: 23 July 2019 8:35 PM GMT)

நாடாளுமன்ற மக்களவையில் சம்பள சட்ட மசோதா தாக்கல் செய்யப்பட்டது.

புதுடெல்லி,

நாடாளுமன்ற மக்களவையில் நேற்று சம்பள சட்ட தொகுப்பு மசோதாவை மத்திய தொழிலாளர் நலத்துறை மந்திரி சந்தோஷ் கங்வார் தாக்கல் செய்தார். சம்பளம் தொடர்பான 4 மத்திய சட்டங்களை ஒருங்கிணைத்து, இந்த மசோதா கொண்டுவரப்பட்டுள்ளது. குறைந்தபட்ச ஊதியத்தை நிர்ணயிக்க மத்திய அரசுக்கு இச்சட்டம் அதிகாரம் அளிக்கிறது.

இதுபோல், பணியிட பாதுகாப்பு, சுகாதாரம், பணி சூழ்நிலை தொடர்பான மசோதாவையும் சந்தோஷ் கங்வார் தாக்கல் செய்தார். ஏற்கனவே உள்ள 13 சட்டங்களை ஒருங்கிணைத்து இம்மசோதா கொண்டுவரப்பட்டுள்ளது.

இரு மசோதாக்களுக்கும் காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், புரட்சிகர சோஷலிஸ்ட் கட்சி உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். நாடாளுமன்ற நிலைக்குழுவுக்கு அனுப்பி வைக்குமாறு அவர்கள் கோரினர். தொழிலாளர்களின் நலன்களை இவை பாதுகாக்கும் என்று கங்வார் தெரிவித்தார்.

Next Story