தேசிய செய்திகள்

காஷ்மீர் நமது சுயமரியாதை சம்பந்தப்பட்டது, இதில் மத்தியஸ்தம் என்ற பேச்சுக்கே இடமில்லை -ராஜ்நாத் சிங் திட்டவட்டம் + "||" + There is no question of mediation in Kashmir issue as it will be against the Shimla agreement-Defence Minister Rajnath Singh in Lok Sabha

காஷ்மீர் நமது சுயமரியாதை சம்பந்தப்பட்டது, இதில் மத்தியஸ்தம் என்ற பேச்சுக்கே இடமில்லை -ராஜ்நாத் சிங் திட்டவட்டம்

காஷ்மீர் நமது சுயமரியாதை சம்பந்தப்பட்டது, இதில் மத்தியஸ்தம் என்ற பேச்சுக்கே இடமில்லை -ராஜ்நாத் சிங் திட்டவட்டம்
காஷ்மீர் என்பது நமது சுயமரியாதை சம்பந்தப்பட்டது, இதில் மத்தியஸ்தம் என்ற பேச்சுக்கே இடமில்லை என்று மக்களவையில் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் திட்டவட்டமாக தெரிவித்தார்.
புதுடெல்லி

ட்ரம்பின் சர்ச்சை பேச்சு குறித்து பிரதமர் மோடி பதிலளிக்கக் கோரி மக்களவையில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர்.

அப்போது மக்களவையில் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் பதில் அளித்து பேசியதாவது:-

ஜெய்சங்கர் ஜி (வெளிவிவகார அமைச்சர்) கூறியது போல், ஜனாதிபதி டிரம்ப் - பிரதமர் மோடி கூட்டத்தில் காஷ்மீர் பிரச்சினை குறித்து  விவாதிக்கப்படவில்லை. சிம்லா ஒப்பந்தத்திற்கு எதிரானதாக இருப்பதால் காஷ்மீர் பிரச்சினையில் மத்தியஸ்தம் என்ற பேச்சுக்கே இடம் இல்லை. காஷ்மீர் என்பது நமது சுயமரியாதை சம்பந்தப்பட்டது, இதில் மத்தியஸ்தம் என்ற பேச்சுக்கே இடமில்லை என கூறினார்.

காஷ்மீர் குறித்த அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பேச்சு  குறித்து பிரதமர் நரேந்திர மோடி தெளிவுபடுத்தக் கோரி காங்கிரஸ் எம்.பி.க்கள் மக்களவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.

தொடர்புடைய செய்திகள்

1. மாஸ்கோவில் காந்தி சிலைக்கு ராஜ்நாத் சிங் மரியாதை
மாஸ்கோவில் உள்ள காந்தி சிலைக்கு பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
2. இந்திய கடற்படையின் கண்காணிப்பில் கடல் வழிப்பாதை பாதுகாப்பானதாக உள்ளது - ராஜ்நாத் சிங்
இந்திய கடற்படையின் கண்காணிப்பில் கடல் வழிப்பாதை பாதுகாப்பானதாக உள்ளது என ராணுவ மந்திரி ராஜ்நாத் சிங் கூறினார்.
3. முதல் ரபேல் போர் விமானத்தைப் பெற்றுக்கொண்டார் மத்திய அமைச்சர் ராஜ்நாத்சிங்
பிரான்ஸ் நாட்டின் போர்டோவில் இந்திய விமானப்படைக்காக வாங்க உள்ள 36 விமானங்களில் முதல் ரபேல் போர் விமானத்தைப் பெற்றுக்கொண்டார் மத்திய அமைச்சர் ராஜ்நாத்சிங்.
4. விமானத்திற்காக கஷ்டப்பட வேண்டிய நிலையில் பாகிஸ்தான் பிரதமர் உள்ளார்- ராஜ்நாத் சிங்
விமானத்திற்காக கஷ்டப்பட வேண்டிய நிலையில் பாகிஸ்தான் பிரதமர் உள்ளார் என்று ராஜ்நாத் சிங் கூறியுள்ளார்.
5. அண்டை நாடு இந்தியாவை சீர்குலைக்க விரும்புகிறது; பாகிஸ்தானை மறைமுகமாக குறிபிட்ட ராஜ்நாத் சிங்
அண்டை நாடு இந்தியாவை சீர்குலைக்க விரும்புகிறது என பாகிஸ்தானை மறைமுகமாக மத்திய ராணுவ மந்திரி ராஜ்நாத் சிங் குறிப்பிட்டார்.