நிலக்கரி சுரங்கத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் 4 பேர் உயிரிழப்பு


நிலக்கரி சுரங்கத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் 4 பேர் உயிரிழப்பு
x
தினத்தந்தி 24 July 2019 10:43 AM GMT (Updated: 24 July 2019 10:43 AM GMT)

ஒடிசாவில், நிலக்கரி சுரங்கத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கியவர்களில் 4 பேர் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது.

புவனேஸ்வர்

ஒடிசாவின் பாரத்பூர்  பகுதியில் உள்ள மகாநதி நிலக்கரி சுரங்கத்தில் தினமும் 20,000 டன் நிலக்கரி எடுக்கப்படுகிறது.

இந்த சுரங்கத்தில் நேற்று நள்ளிரவு 15 ஊழியர்கள் வேலை செய்தபோது, 25 மீட்டர் ஆழத்துக்கு சுரங்கத்தின் ஒரு பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டது. இதுகுறித்து  உடனடியாக உயரதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் ஜேசிபி உள்ளிட்ட இயந்திரங்களுடன் மீட்பு பணி நடந்து வருகிறது.

இதில் 9 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்ட நிலையில், மேலும் 4 பேர்  நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. மீட்பு பணியானது தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும், சுரங்கத்தில் மீண்டும் பணி தொடங்க ஒரு வார காலம் ஆகும் என அந்நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர் டிக்கன் மெஹ்ரா தெரிவித்துள்ளார்.

கடந்த ஆண்டு டிசம்பர் மாதம், மேகாலயாவில் சட்டவிரோதமாக இயங்கி வந்த சுரங்க ஆலையில் சிக்கி உயிரிழந்த சிலரது சடலம் ஒரு வாரத்துக்கு பின் மீட்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Next Story