இங்கிலாந்து பிரதமராக பதவி ஏற்றுக்கொண்ட போரீஸ் ஜான்சனுக்கு பிரதமர் மோடி வாழ்த்து


இங்கிலாந்து பிரதமராக பதவி ஏற்றுக்கொண்ட போரீஸ் ஜான்சனுக்கு பிரதமர் மோடி வாழ்த்து
x
தினத்தந்தி 24 July 2019 5:01 PM GMT (Updated: 24 July 2019 5:01 PM GMT)

இங்கிலாந்தின் புதிய பிரதமராக பதவி ஏற்றுக்கொண்ட போரீஸ் ஜான்சனுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி,

இங்கிலாந்து பிரதமராக போரீஸ் ஜான்சன் முறைப்படி பதவி ஏற்றுக்கொண்டார். பிரெக்ஸிட் விவகாரத்தில் தெரசா மே ராஜினாமா செய்ததை தொடர்ந்து போரீஸ் ஜான்சன் தேர்வானார். பிரெக்ஸிட் விவகாரத்தில் புதிய மற்றும் சிறப்பான ஒப்பந்தம் மேற்கொள்ளப்படும் என்று புதியதாக பதவி ஏற்றுக்கொண்ட இங்கிலாந்து பிரதமர் போரீஸ் ஜான்சன்  தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் இங்கிலாந்தின் புதிய பிரதமராக பதவி ஏற்றுக்கொண்ட போரீஸ் ஜான்சனுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், 

இங்கிலாந்தின் புதிய பிரதமராக பதவி ஏற்றுக்கொண்ட  போரீஸ் ஜான்சனுக்கு வாழ்த்துக்கள்.  இந்தியா - இங்கிலாந்து இடையேயான உறவை மேலும் வலுப்படுத்த இணைந்து பணியாற்ற விரும்புகிறேன் என கூறியுள்ளார்.

Next Story