தேசிய செய்திகள்

‘வரி ஏய்ப்பு செய்ய நினைக்கிறவர்களை விடாதீர்கள்’ - வருமான வரி அதிகாரிகளுக்கு நிர்மலா சீதாராமன் அறிவுறுத்தல் + "||" + Don't leave tax evaders - Nirmala Sitharaman Advice to Income Tax Officers

‘வரி ஏய்ப்பு செய்ய நினைக்கிறவர்களை விடாதீர்கள்’ - வருமான வரி அதிகாரிகளுக்கு நிர்மலா சீதாராமன் அறிவுறுத்தல்

‘வரி ஏய்ப்பு செய்ய நினைக்கிறவர்களை விடாதீர்கள்’ - வருமான வரி அதிகாரிகளுக்கு நிர்மலா சீதாராமன் அறிவுறுத்தல்
வரி ஏய்ப்பு செய்ய நினைக்கிறவர்களை விடாதீர்கள், கடுமையாக கையாளுங்கள் என்று வருமான வரித்துறை அதிகாரிகள் மத்தியில் பேசிய மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் அறிவுறுத்தினார்.
புதுடெல்லி,

நமது நாட்டில் ஒவ்வொரு ஆண்டும் ஜூலை மாதம் 24-ந் தேதி வருமான வரி தினம் கொண்டாடப்படுகிறது. டெல்லியில் நேற்று நடந்த கொண்டாட்டத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் மத்தியில் மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-


வரி ஏய்ப்பு செய்ய வேண்டும் என்று நினைக்கிறவர்களை கடுமையாக கையாளுங்கள். நேர்மையாக வரி செலுத்த வேண்டும் என்ற எண்ணம் உடையவர்களுக்கு தேவையான வசதிகளை செய்து தர வேண்டும்.

வருமான வரித்துறையின் வரம்புக்குள் இருப்போரின் எண்ணிக்கையை பிரதமர் மோடி விரும்புகிறபடி, தற்போதைய 8 கோடி என்ற எண்ணிக்கையில் இருந்து அதிகரிக்க முயற்சிகள் எடுக்க வேண்டும்.

2019-20-ம் நிதி ஆண்டில் நேரடி வரி வருவாய் வசூல் இலக்கு ரூ.13 லட்சத்து 35 ஆயிரம் கோடி என்று பட்ஜெட்டில் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. உங்களுக்கு மிகப்பெரிய இலக்கை தந்து விடவில்லை. இது எட்டக்கூடியதுதான்.

ஏனென்றால் கடந்த 5 ஆண்டுகளில் வருமான வரித்துறையினர் வரி வசூலை இரு மடங்காக்கி இருக்கிறீர்கள்.

உங்களுக்குத் தேவையான வசதிகளை செய்து தரத்தான் நாங்கள் இங்கே இருக்கிறோம்.

உங்கள் கையில் கருவிகள் இருக்கின்றன. தரவுகள் இருக்கின்றன. நீங்கள்தான் வரி செலுத்துவோரை கண்காணிக்க வேண்டும். எங்கே தவறு நடக்கிறது என்பதை கண்டுபிடிக்க வேண்டும். வரி ஏய்ப்பு செய்கிறவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதில் நீங்கள் உறுதிபட செயல்படுகிறபோது, நானும் உங்களுடன் முழுமையாக இருப்பேன்.

வருமான வரி, அமலாக்கப்பிரிவு இயக்குனரகம், வருவாய் புலனாய்வு பிரிவு இயக்குனரகம் ஆகியவை வரி செலுத்துகிறவர்கள் பற்றிய தகவல்களை பகிர்ந்து கொள்ள வேண்டும். அது சிறப்பான ஒருங்கிணைத்தலுக்கும், விசாரணைக்கும் உதவும்.

வரி என்பது தண்டனையாக வசூலிக்கப்படுவதில்லை. நிறைய சம்பாதிப்பவர்கள் நாட்டை கட்டமைப்பதில் கூடுதல் பங்களிப்பு செய்ய வேண்டும் என்ற நோக்கத்துடன்தான் வசூலிக்கப்படுகிறது.

நாடு அதிக வரியை பெற்றுக்கொள்கிறது. ஏனென்றால் தங்களால் சம்பாதிக்க முடியாதவர்களுக்கு அதை நாங்கள் திரும்ப பகிர்ந்து அளிக்க விரும்புகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.