மத்திய அரசின் முத்தலாக் மசோதா குறிப்பிட்ட மதத்திற்கும், சமுதாயத்திற்கும் எதிரானது -கனிமொழி எம்பி


மத்திய அரசின் முத்தலாக் மசோதா குறிப்பிட்ட மதத்திற்கும், சமுதாயத்திற்கும் எதிரானது -கனிமொழி எம்பி
x
தினத்தந்தி 25 July 2019 9:58 AM GMT (Updated: 25 July 2019 9:58 AM GMT)

மத்திய அரசின் முத்தலாக் மசோதா குறிப்பிட்ட மதத்திற்கும், சமுதாயத்திற்கும் எதிரானது என மக்களவையில் கனிமொழி எம்பி பேசினார்.

புதுடெல்லி

மக்களவையில் கனிமொழி எம்.பி. பேசும்போது கூறியதாவது:-

இஸ்லாமிய பெண்களின் உரிமையை பற்றி மட்டுமே அரசு கவலைப்படுவது ஏன்? நாட்டில் உள்ள இந்து மற்றும் கிறிஸ்தவ பெண்களின் உரிமை குறித்து ஏன் அரசு அக்கறை கொள்ளவில்லை?.

குறிப்பிட்ட சமுதாயம் மற்றும் மதத்தை குறிவைத்து கொண்டு வரப்பட்டுள்ள இந்த முத்தலாக் தடை சட்டத்தை திமுக எதிர்க்கிறது. கணவன்  மனைவிக்கிடையே நடக்கும் இந்த சிவில் விவகாரத்தை கிரிமினல் குற்றமாக எப்படி கருதமுடியும்?.

எந்த ஒரு நாட்டிலாவது இப்படி ஒரு சட்டத்தை கொண்டுவர முடியுமா?

நாட்டில் உள்ள இஸ்லாமிய மக்கள் பாதுகாப்பற்றவர்களாக உணர வைக்க திமுக அனுமதிக்காது. மத்திய அரசின் முத்தலாக் மசோதா குறிப்பிட்ட மதத்திற்கும், சமுதாயத்திற்கும் எதிரானது.

33% மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை கொண்டுவராமல் முத்தலாக் தடுப்பு மசோதாவை நிறைவேற்றவேண்டிய அவசியம் என்ன?

பெண்களின் உரிமைக்களை காப்பதாக கூறும் அரசு சபரிமலை விவகாரத்தில்  மவுனம் காப்பது ஏன்? என கூறினார்.

மக்களவையில் முத்தலாக் மசோதாவுக்கு  ஐக்கிய ஜனதா தளம்  சார்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. ஐக்கிய ஜனதா தளம் எம்.பி. ராஜீவ் ரஞ்சன் சிங் கூறுகையில், 'இந்த மசோதா ஒரு குறிப்பிட்ட சமூகத்தில் அவநம்பிக்கையை உருவாக்கும்,  எங்கள் கட்சி இந்த மசோதாவை ஆதரிக்காது என கூறினார்.

Next Story